தினேஷ் கார்த்திக்லாம் ஃபினிஷரே இல்ல.. ஸ்ரீகாந்த் செம விளாசல்..!

Published : Aug 03, 2022, 06:49 PM IST
தினேஷ் கார்த்திக்லாம் ஃபினிஷரே இல்ல.. ஸ்ரீகாந்த் செம விளாசல்..!

சுருக்கம்

தினேஷ் கார்த்திக் எல்லாம் ஒரு ஃபினிஷரே இல்லை என்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விளாசியுள்ளார்.  

ஐபிஎல் 15வது சீசனில் அபாரமாக விளையாடி, ஆர்சிபி அணிக்கு டெத் ஓவர்களில் அதிரடியாக ஆடி பல போட்டிகளை முடித்து கொடுத்தார் தினேஷ் கார்த்திக். அதன்விளைவாக இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்தார்.

இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர்களிலும் டெத் ஓவர்களில் அதிரடியாக ஆடி கடைசி 4-5 ஓவர்களில் அணிக்கு நிறைய ரன்களை சேர்த்து கொடுத்துவருகிறார். டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், இந்திய அணியில் தனக்கான இடத்தை நிரந்தரமாக்கிவிட்டார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கூட, டெத் ஓவர்களில் அதிரடியாக ஆடி 19 பந்தில் 41 ரன்களை விளாசி 20 ஓவரில் இந்திய அணி 190 ரன்களை குவிக்க உதவினார். ஆனால் அதற்கடுத்த 2 போட்டிகளிலும் அவர் பெரிதாக ஆடவில்லை.

இதையும் படிங்க - நல்ல வேளை, தினேஷ் கார்த்திக் இந்தியாவில் பிறந்தார்..! பாகிஸ்தானில் பிறந்திருந்தால் அவ்வளவுதான்

தினேஷ் கார்த்திக்கை ஒரு ஃபினிஷராக இந்திய அணி நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், தினேஷ் கார்த்திக் ஃபினிஷர் கிடையாது என்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள ஸ்ரீகாந்த், தினேஷ் கார்த்திக்கை ஃபினிஷர் என்று சொல்வது தவறு. ஃபினிஷருக்கான வரையறையே தவறாக புரிந்துகொண்டுள்ளனர். ஐபிஎல் மற்றும் இந்தியாவிற்காக சில போட்டிகளில் டெத் ஓவர்களில் தினேஷ் கார்த்திக் நன்றாக ஆடியிருக்கிறார். ஃபைனல் டச் நன்றாக கொடுக்கிறாரே தவிர, அவர் ஃபினிஷர் கிடையாது. ஃபினிஷர் என்பவர் கடைசி 4-5 ஓவர்களில் அடித்து ஆடுபவர் கிடையாது. 8-9 ஓவர்களிலிருந்து ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச்சென்று வெற்றிகரமாக முடித்து கொடுப்பவரே ஃபினிஷர். 

இதையும் படிங்க - நல்ல பிளேயரை சீரழித்துவிடாதீர்கள்..! ரோஹித்தை விளாசிய ஸ்ரீகாந்த்

சூர்யகுமார் யாதவை எடுத்துக்கொள்ளுங்கள். இங்கிலாந்துக்கு எதிராக கடைசி வரை தனி ஒருவனாக ஆட்டத்தை எடுத்துச்சென்றார். ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகியோர் ஃபினிஷர்கள். ரோஹித் சர்மா ஓபனிங்கில் இறங்கி கடைசிவரை ஆடுவார். அதுவும் டெத் ஓவர்களில் 12வது கியரில் ஆடுவார். அவரும் ஃபினிஷரே. ஆனால் தினேஷ் கார்த்திக் ஃபினிஷர் கிடையாது என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

SRH-ன் இமாலய இலக்கை தவிடுபொடியாக்கிய பஞ்சாப்.. 200+ ரன்களை சேஸ் செய்து உலக சாதனை!
Vaibhav Suryavanshi Net Worth: 15 வயதில் கோடீஸ்வரன்.. சொகுசு பங்களா, கார்கள்.. பிரம்மிக்க வைக்கும் வைபவ் சூர்யவன்ஷி சொத்து மதிப்பு!