ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு..!

Published : Aug 03, 2022, 02:38 PM IST
ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு..!

சுருக்கம்

ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 27ம் தேதி முதல் செப்டம்பர் 11ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. 

ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டி எப்போதுமே முக்கியத்துவம் பெறும். அந்தவகையில், ஆசிய கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஆகஸ்ட் 28ம் தேதி மோதுகின்றன.

இதையும் படிங்க - WI vs IND: வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கை வெளுத்து வாங்கிய சூர்யகுமார் யாதவ்.! 3வது டி20யில் இந்தியா அபார வெற்றி

நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவிட்டு, அங்கிருந்து ஐக்கிய அரபு அமீரகம் சென்று ஆசிய கோப்பையில் ஆடுகிறது பாகிஸ்தான் அணி.

அந்தவகையில், நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஆசிய கோப்பை ஆகிய தொடர்களுக்கான பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு..! ஆகஸ்ட் 28ல் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), ஆசிஃப் அலி, ஃபகர் ஜமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ராஃப், இஃப்டிகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி, ஷாநவாஸ் தஹானி, உஸ்மான் காதிர்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ 3-வது ஓடிஐ.. வேஸ்ட் லக்கேஜ்.. ஆல்ரவுண்டரை நீக்கிய பிசிசிஐ.. இந்திய அணி பிளேயிங் லெவன்!
IND VS NZ டி20 தொடரில் இருந்து தமிழக வீரர் விலகல்.. மாற்று வீரர் இவரா?