Paris 2024 Olympics Mascots: ஒலிம்பிக் தொடக்க விழா, போட்டி நடைபெறும் இடங்கள், சின்னங்கள் பற்றி தெரியுமா?

By Rsiva kumar  |  First Published Jul 15, 2024, 8:59 PM IST

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் 2024 கோடைகால ஒலிம்பிக், அதிகாரப்பூர்வமாக கேம்ஸ் ஆஃப் XXXIII ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகிறது.


நடப்பு ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பாரீஸில் நடைபெறுகிறது. பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் 3ஆவது முறையாக ஒலிம்பிக் 2024 விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக கடந்த 1900 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளில் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தது. நடப்பு ஆண்டுக்கான பாரீஸ் ஒலிம்பிக் 2024 வரும் 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

இந்த தொடரில் இந்தியா சார்பில் 66 வீரர்கள் மற்றும் 47 வீராங்கனகள் உள்பட 113 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இதன் தொடக்க விழாவில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து இந்திய மூவர்ண கொடியை ஏந்தி அணி வகுப்பு நடத்த உள்ளார். இதே போன்று தமிழக டேபிள் டென்னிஸ் வீரரான அஜந்தா சரத் கமலும் இந்திய மூவர்ணக் கொடியை ஏந்தி அணி வகுப்பு நடத்த உள்ளார்.

Tap to resize

Latest Videos

ஒரே நாளில் ஒரு கோடி லைக்ஸ் – ஆனந்த் - ராதிகா தம்பதியினரை வாழ்த்தி தோனி போட்ட பதிவிற்கு கிடைத்த வரவேற்பு!

ஒலிம்பிக் 2024 இடம் பெறும் விளையாட்டுகள்:

இந்த ஒலிம்பிக் தொடரில் வில்வித்தை, ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல், தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, பீச் வாலிபால், குத்துச்சண்டை, கேனோ, சைக்கிளிங் (ரோடு, டிராக், மவுண்டைன் பைக்), டைவிங், குதிரையேற்றம், ஃபென்சிங் (கத்தி சண்டை), கால்பந்து, கோல்ஃப், கைப்பந்து, ஹாக்கி, ஜூடோ, மராத்தான் நீச்சல், மாடர்ன் பெண்டாத்லான், ரிதம் ஜிம்னாஸ்டிக்ஸ், ரோயிங், ரக்பி செவன்ஸ், படகோட்ட போட்டி, துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ, டென்னிஸ், டிராம்போலின், டிரையத்லான், வாலிபால், தண்ணீர் பந்தாட்ட போட்டி, பளுதூக்குதல் மற்றும் மல்யுத்த ஆகிய விளையாட்டு போட்டிகள் இடம் பெற்றுள்ளன.

பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்ட விளையாட்டு எது? புதிதாக இடம் பெறும் விளையாட்டுகள் என்னென்ன்?

பாரீஸ் ஒலிம்பிக்கில் 2024 அறிமுகம் செய்யப்படும் விளையாட்டு:

இது தவிர இந்த ஆண்டின் முதல் முறையாக பிரேக்கிங் (பிரேக் டான்ஸிங்) விளையாட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற யூத் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது முதல் முறையாக முதன்மை ஒலிம்பிக் மேடையில் இடம் பெறுகிறது. பாரிஸ் ஒலிம்பிக் பிரேக்கிங் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் அமெரிக்கர் யார் என்றால் அது விக்டர் மாண்டால்வோ தான்.

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இடம் பெற்ற புதிய விளையாட்டுகள்:

சர்ஃபிங் (கடலில் நடத்தப்படும் நீர் விளையாட்டு), ஸ்கேட்போர்டிங், ஏறு விளையாட்டு ஆகிய விளையாட்டு போட்டிகள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தப் போட்டிகளில் சர்ஃபிங், ஸ்கேட்போர்டிங், ஏறு விளையாட்டு ஆகியவை கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Olympics 2024: ஒலிம்பிக் 2024 தொடக்க விழாவில் மூவர்ணக் கொடியை ஏந்தி அணிவகுப்பு நடத்தும் பிவி சிந்து!

பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் நீக்கப்பட்ட போட்டிகள்:

இதே போன்று கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்ட பேஸ்பால், சாஃப்ட்பால், கராத்தே ஆகிய விளையாட்டு போட்டிகள் இந்த ஆண்டில் இடம் பெறவில்லை.

ஒலிம்பிக் 2024 போட்டிகள் நடைபெறும் இடங்கள்:

ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் பாரீஸை சுற்றிலும் நடைபெற உள்ளது. இதற்காக ஸ்டேட் டி பிரான்ஸ், ரோலண்ட் கரோஸ் ஸ்டேடியம் மற்றும் சாம்ப்ஸ் எலிசீஸ் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறும். ஒலிம்பிக் போட்டிக்கான முதல் சர்ஃபிங் போட்டி டஹிடியில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

கணுக்காலில் ஏற்பட்ட காயத்திற்கு கிடைத்த மருந்து – 45ஆவது முறையாக டிராபியை கைப்பற்றிய லியோனல் மெஸ்ஸி!

ஒலிம்பிக் ஜோதி:

ஒலிம்பிக் தொடக்க விழா தொடங்குவதற்கு முன்னதாக ஒலிம்பிக் ஜோதியானது, மார்சேயில் தொடங்கி பிரான்ஸின் பல்வேறு நகரங்கள் வழியாக ஒலிம்பிக் ஜோதியை ஏந்திய ஊர்வலம் நடைபெறுகிறது.

பாரீஸ் 2024 ஒலிம்பிக் சின்னம்:

பாரீஸ் 2024 ஒலிம்பிக் சின்னத்தின் பெயர் ஃபிரைஜ். இது ஃப்ரிஜியன் மனித உருவங்களை தொப்பிகளை கொண்டது. இது சுதந்திரத்தின் சின்னங்களாக தேர்வு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சின்னத்தின் நிறமானது நீலம், வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களை கொண்டுள்ளது. இது பிரான்ஸ் நாட்டின் மூவர்ணக் கொடியின் நிறங்களை கொண்டது. அதோடு அந்த ஃபிரைஜின் நடுவில் தங்க நிறத்திலான பாரீஸ் 2024 லோகோ இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!