சதம் அடித்த புஜாரா..!

By thenmozhi gFirst Published Sep 1, 2018, 12:42 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், மொயின் அலியின் அபார பந்துவீச்சால், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில், 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. புஜாரா அபாரமாக ஆடி, சதம் அடித்து ஆறுதல் தந்தார்.
 

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், மொயின் அலியின் அபார பந்துவீச்சால், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில், 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. புஜாரா அபாரமாக ஆடி, சதம் அடித்து ஆறுதல் தந்தார்.

இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, சவுதம்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸில், 246 ரன்கள் எடுத்தது. சாம்குர்ரன் 78 ரன்கள், மொயின் அலி 40 ரன்கள் எடுத்தனர்.

இதை தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று, தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுல் (19 ரன்), ஷிகர் தவான் (23 ரன்) சொற்ப ரன்களுக்கு ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

எனினும், புஜாராவுடன் இணைந்த கேப்டன் கோலி நிதானமாக விளையாடினார். அவர், 46 ரன்களுக்கு சாம்குர்ரனின் பந்துவீச்சில், கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரஹானே 11, ரிஷப் பாண்ட் 0, ஹர்திக் பாண்ட்யா 4, அஸ்வின் 1 என, யாரும் நிலைத்து நிற்கவில்லை. இஷாந்த் சர்மா மட்டும் 14, ரன்கள் எடுத்து, கொஞ்சம் தாக்குபிடித்தார். 

மறுமுனையில் புஜாராக நின்று ஆடி சதம் அடித்தார். இது, அவரது 15வது டெஸ்ட் சதம்; இங்கிலாந்து நாட்டில் அவர் அடித்துள்ள முதலாவது சதமாகும். இறுதியில், 84.5 ஓவர்களில் இந்திய அணி, 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. புஜாரா மட்டும், 132 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இங்கிலாந்து பந்துவீச்சாளர் மொயின் அலி,  சிறப்பாக பந்துவீசி, 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இங்கிலாந்து அணி, 27 ரன்கள் பின்தங்கிய நிலையில், தனது 2வது இன்னிங்ஸை ஆடி வருகிறது.

click me!