#TokyoOlympics முதல் நாள்: பதக்க பட்டியலில் சீனா முதலிடம்..! ஒரு பதக்கம் கூட வெல்லாத பரிதாப அமெரிக்கா, ரஷ்யா

By karthikeyan VFirst Published Jul 24, 2021, 8:54 PM IST
Highlights

டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் நாளில் 3 தங்கம் மற்றும் ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் சீனா முதலிடம் பிடித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் நாளில் ஒரு பதக்கம் கூட வெல்லவில்லை.
 

கடந்த ஆண்டு நடந்திருக்க வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஓராண்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கொரோனா சவால்களுக்கு மத்தியில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. 

டோக்கியோ ஒலிம்பிக்கின் இன்றைய முதல் நாள் முடிவில் அதிகபட்சமாக சீனா 3 தங்கம் மற்றும் ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கொரோனா என்ற கொடூர வைரஸை உலகிற்கே பரப்பிவிட்ட சீனா, உலகை கொரோனாவில் சிக்கவைத்துவிட்டு, அந்த பெருந்தொற்றிலிருந்து முதல் நாடாக மீண்ட சீனா, ஒலிம்பிக்கிற்கு எந்த பிரச்னையும் இல்லாமல் தயாரானது.

ஆனால் அதேவேளையில், கொரோனாவின் அடுத்தடுத்த அலைகளை எதிர்கொண்டுவரும் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு கொரோனாவிலிருந்து மீள்வதே பெரும் சவாலாக இருந்தது. அப்படியிருக்கையில் எங்கிருந்து ஒலிம்பிக்கிற்கு தயாராவது?

2016 ரியோ ஒலிம்பிக்கில் 121 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்த அமெரிக்கா, டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் நாளில் ஒரு பதக்கம் கூட வெல்லவில்லை. அதேபோல ரஷ்யாவும் பதக்க கணக்கை இன்னும் தொடங்கவில்லை.

4 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. தலா ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என தலா 2 பதக்கங்களை வென்றுள்ள இத்தாலி மற்றும் ஜப்பான் நாடுகள் 2ம் இடத்தை பகிர்ந்துள்ளன. ஒரு தங்கம் மற்றும் 2 வெண்கலத்துடன் 3 பதக்கங்களை வென்றுள்ள தென்கொரியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

49 கிலோ எடைப்பிரிவு மகளிர் பளுதூக்குதலில் இந்தியாவிற்கு மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று கொடுக்க, முதல் நாளிலேயே பதக்க கணக்கை தொடங்கிய இந்தியா, ஒரு வெள்ளியுடன் பதக்க பட்டியலில் 12ம் இடத்தில் உள்ளது.
 

click me!