உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 2ஆம் கட்ட சுற்றானது தற்போது தொடங்கியுள்ளது.
உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் மற்றும் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் ஆர் பிரக்ஞானந்தா மோதின. இரண்டு சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முதல் சுற்றுப் போட்டியானது நேற்று நடந்தது. இதில், பிரக்ஞானந்தா ஒயிட் காயினுடன் விளையாடினார்.
ஆசிய கோப்பைக்கு தாயாரகும் டீம் இந்தியா; பெங்களூருக்கு வருகை தரும் சீனியர் வீரர்கள்!
இதில், தொடக்க முதலே பிரக்ஞானந்தா நிதானமாக விளையாடினார். கடைசி வரை பொறுமையாக விளையாடிய பிரக்ஞானந்தா போட்டியை டிராவில் முடித்தார். கிட்டத்தட்ட 35 ஆவது மூவிற்குப் பிறகு போட்டியானது டிராவில் முடிந்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்றைய 2ஆவது சுற்றுப் போட்டி தொடங்கியது. தற்போது வரையில் 9 மூவ் நடந்து முடிந்துள்ளது. இந்தப் போட்டியும் டிராவில் முடிந்தால் டை பிரேக்கர் சுற்று நடத்தப்பட்டு வெற்றியாளர் தீர்மானிக்கப்படும்.
உலகக் கோப்பை தொடருக்காக சிஎஸ்கே பயிற்சியாளரை தட்டி தூக்கிய நியூசிலாந்து!
இன்னும் சற்று நேரத்தில் சந்திரயான் 3 நிலவில் தரையிறங்க நிலையில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் டைட்டில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செஸ் ஜாம்பவானான விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் அரையிறுதிப் போட்டி மற்றும் இறுதிப் போட்டிக்கு வந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜித்தேஷ் சர்மா, ஆவேஷ் கான் இடம் பெறுவார்களா? இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு!
பிரக்ஞானந்தா மற்றும் கார்ல்சன் இருவரும் பல்வேறு போட்டிகளில் 19 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். ஆனால், குறைவான போட்டிகளில் மட்டுமே அவர் வெற்றி பெற்றிருக்கிறார். எனினும், கிளாசிக்கல் செஸ்ஸில் இருவரும் ஒரு போட்டியி மோதியுள்ளனர். அந்தப் போட்டியானது டிராவில் முடிந்தது. ரேபிட்/எக்ஸிபிஷன் கேம்களில், கார்ல்சென் 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று ஆறு ஆட்டங்கள் டிராவில் முடிந்தது. என்னதான் கார்ல்சன் அனுபவம் வாய்ந்த வீரராக இருந்தாலும், சமீபத்திய முடிவுகள் எல்லாம் பிரக்ஞானந்தாவிற்கு சாதகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசி வரை கேப்டனாக வர முடியாத இந்திய வீரர்கள்? யுவராஜ் சிங், ஜாகீர் கான் கூட கேப்டன் இல்லையா?