ஆசிய கோப்பைக்கு தாயாரகும் டீம் இந்தியா; பெங்களூருக்கு வருகை தரும் சீனியர் வீரர்கள்!

Published : Aug 23, 2023, 04:19 PM IST
ஆசிய கோப்பைக்கு தாயாரகும் டீம் இந்தியா; பெங்களூருக்கு வருகை தரும் சீனியர் வீரர்கள்!

சுருக்கம்

ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் நாளை தொடங்கும் முகாமில் இந்திய வீரர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை நடத்தும் ஆசியக் கோப்பை 2023 தொடர் வரும் 30 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஆசிய கோப்பைக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. தற்போது ஆசிய கோப்பைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.

உலகக் கோப்பை தொடருக்காக சிஎஸ்கே பயிற்சியாளரை தட்டி தூக்கிய நியூசிலாந்து!

பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஆசியக் கோப்பைக்கான இந்தியாவின் பயிற்சி முகாம் தொடங்க உள்ள நிலையில், ராகுல் டிராவிட் தலைமையிலான அணி வீரர்கள் முகாமில் கலந்து கொள்ள இருக்கின்றனர். தற்போது அயர்லாந்தில் உள்ள இந்திய வீரர்கள் இன்றைய போட்டியை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிறகு சஞ்சு சாம்சன், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் அடுத்த 3 நாட்களில் முகாமிடல் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

ஜித்தேஷ் சர்மா, ஆவேஷ் கான் இடம் பெறுவார்களா? இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு!

ஆசிய கோப்பை 2023 பயிற்சி முகாம் 29 ஆம் தேதி வரையில் நடக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பிறகு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் ஓய்வில் இருந்தனர். சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் டி20 தொடரை முடித்துவிட்டு நாடு திரும்பினர். எஞ்சிய வீரர்கள் அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றனர்.

கடைசி வரை கேப்டனாக வர முடியாத இந்திய வீரர்கள்? யுவராஜ் சிங், ஜாகீர் கான் கூட கேப்டன் இல்லையா?

இந்த நிலையில், தான் நாளை முதல் தொடங்கும் முகாமில் இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், பேட்டிங் ஆர்டர் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, அணியை பலப்படுத்தும் முயற்சியில் ராகுல் டிராவிட் தலைமையிலான குழு முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ireland vs India 3rd T20: டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணியில் மாற்றம் செய்யப்படுமா?

ஆசிய கோப்பைக்கான இந்திய வீரர்கள்:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கேஎல் ராகுல், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா.

ஸ்டாண்ட் பை பிளேயர்: சஞ்சு சாம்சன்.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!