சாம்பியன்ஸ் டிராபி: இன்று இந்தியாவுடன் மோதுகிறது வங்கதேசம்…

First Published Jun 15, 2017, 9:27 AM IST
Highlights
Champions Trophy Bangladesh crashes against India today


சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதியில் இந்தியாவும், வங்கதேசமும் எக்பாஸ்டனில் இன்று மோதுகின்றன.

நடப்பு சாம்பியனான இந்திய அணி, வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவதில் தீவிரமாக உள்ளது.

அதேநேரத்தில் வங்கதேச அணி கடினமான பிரிவில் இடம்பெற்றிருந்த போதிலும், அரையிறுதிக்கு முன்னேறி நியூஸிலாந்து அணியையும் தோற்கடித்துள்ளது.

அசத்தலாக விளையாடி வரும் வங்கதேசம் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுமானால், அது அந்த அணிக்கு மிகப்பெரிய வரலாறாக அமையும்.

வங்கதேச அணி தமிம் இக்பால், செளம்ய சர்க்கார், சபீர் ரஹ்மான், முஷ்பிகுர் ரஹிம், ஷகிப் அல்ஹசன், மகமதுல்லா என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் மோர்ட்டஸா, முஸ்தாபிஜுர் ரஹ்மான், தஸ்கின் அஹமது, ரூபெல் ஹுசைன் கூட்டணியும், சுழற்பந்து வீச்சில் ஷகிப் அல்ஹசன், மொஸாதீக் ஹுசைன் கூட்டணியும் பலம் சேர்க்கிறது.

வங்கதேசத்தோடு ஒப்பிடுகையில் இந்திய அணி பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் வலுவாகவே உள்ளது.

பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ரோஹித் சர்மா}ஷிகர் தவன் ஜோடி இந்த ஆட்டத்திலும் வலுவான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுக்கும். மிடில் ஆர்டரில் கேப்டன் விராட் கோலி, யுவராஜ் சிங், தோனி, கேதார் ஜாதவ், ஹார்திக் பாண்டியா ஆகியோர் பலம் சேர்க்கிறார்கள்.

இவர்களில் கேதார் ஜாதவ் தவிர, எஞ்சிய அனைவருமே நல்ல ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும்.

வேகப்பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா, ஹார்திக் பாண்டியா கூட்டணி பலம் சேர்க்கிறது. தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களை மிரட்டிய புவனேஸ்வர் குமார், பூம்ரா கூட்டணி, வங்கதேச பேட்ஸ்மேன்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என நம்பலாம். சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா கூட்டணி பலம் சேர்க்கிறது.

இந்தியா அணியின் விவரம்:

ரோஹித் சர்மா, ஷிகர் தவன், விராட் கோலி (கேப்டன்), யுவராஜ் சிங், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின்/ உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா.

வங்கதேசம் அணியின் விவரம்:

தமிம் இக்பால், செளம்ய சர்க்கார், சபீர் ரஹ்மான், முஷ்பிகுர் ரஹிம் (விக்கெட் கீப்பர்), ஷகிப் அல்ஹசன், மகமதுல்லா, மொஸாதீக் ஹுசைன், தஸ்கின் அஹமது, மஷ்ரபே மோர்ட்டஸா (கேப்டன்), ரூபெல் ஹுசைன், முஸ்தாபிஜுர் ரஹ்மான்.

tags
click me!