Asian Games:பிரம்மாண்ட கலை நிகழ்ச்சியுடன் தொடங்கிய ஆசிய விளையாட்டு போட்டி; புடவையில் வந்த இந்திய வீராங்கனைகள்!

By Rsiva kumar  |  First Published Sep 23, 2023, 6:52 PM IST

சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகளின் தொடக்க விழா தற்போது கலை நிகழ்ச்சிகளுடன் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது.


ஆசிய விளையாட்டு போட்டிகள் 1951 ஆம் ஆண்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் நடந்தது. இதையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு 19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடக்க இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

MS Dhoni Ad Shooting: மோகன்லால் உடன் இணைந்து விளம்பரத்தில் நடிக்கும் தோனி: வைரலாகும் புகைப்படம்!

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், தான் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் தற்போது சீனாவில் ஹாங்சோவ் நகரில் இன்று பிரமாண்டமாக கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியுள்ளது. ஹாங்சோ நகரிலுள்ளா தாமரைப்பூ வடிவிலான ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் சென்டர் ஸ்டேடியத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் தொடக்க விழா தொடங்கப்பட்டுள்ளது.

ரூ.450 கோடி பட்ஜெட், வாரணாசி கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி!

இந்த நிகழ்ச்சியின் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைக்கிறார். இந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,500 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இடம் பெற்று விளையாட உள்ளனர். மொத்தம் 40 வகையான விளையாட்டுகளில், 61 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகள் ஹாங்சோவ் நகரில் 56 இடங்களில் நடத்தப்படும். போட்டியில் சுமார் 12 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இவர்களைத் தவிர ஆயிரக்கணக்கான பயிற்சியாளர்கள், அலுவலர்கள், உதவியாளர்களும் சீனா சென்றுள்ளனர். இந்தியாவிலிருந்து கிட்டத்தட்ட 655 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பெண் வீராங்கனைகள் புடவை அணிந்து இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்திய அணியின் உலகக் கோப்பைக்கான புதிய ஜெர்சியை பிரதமருக்கு வழங்கிய சச்சின்!

இன்றைய போட்டிகள் (24):

துப்பாக்கி சுடுதல் : பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் பிரிவு (தனி மற்றும் டீம்)  - ரமிதா, மெஹுலி கோஷ், ஆஷி சௌக்சே – காலை 6 மணி

மகளிர் கிரிக்கெட் அரையிறுதிப் போட்டி (காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரையில்)

படகோட்டுதல் – இறுதிப் போட்டி (காலை 6.30)

வுஷூ – சுற்று 1 முதல் இறுதி போட்டி (காலை 6.30 மணி முதல் 5 மணி வரையில்)

டேபிள் டென்னிஸ் – ஆண்கள் மற்றும் பெண்கள் – சுற்று 4 முதல் காலிறுதி (காலை 7.30)

டென்னிஸ் (சுற்று 1) - சுமித் நாகல், அங்கிதா ரெய்னா, கர்மான் தண்டி (ஒற்றையர்), கலப்பு இரட்டையர் (காலை 7:30 மணி)

ஆண்கள் ஹாக்கி – இந்தியா – உஸ்பெகிஸ்தான் (காலை 8.45 மணி)

பெண்கள் ரக்பி – இந்தியா – ஹாங்காங் (காலை 9.30 மணி), இந்தியா – ஜப்பான் (பிற்பகல் 2.30 மணி)

குத்துச்சண்டை (சுற்று 1) – நிகத் ஜரீன் (காலை 11:30), ஜெய்ஸ்மின் லம்போரியா (காலை 11:30), சிவ தாபா (காலை 11:30), லக்ஷ்யா சாஹர் (காலை 11:30), பர்வீன் ஹூடா (மாலை 4:30), சஞ்சீத் (மாலை 4:30)

மகளிர் கால்பந்து – இந்தியா – தாய்லாந்து (பிற்பகல் 1.30 மணி)

ஆண்கள் கால்பந்து – இந்தியா – மியான்மர் (மாலை 5 மணி)

வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த சச்சின், ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர்!

 

Team India entrance in the opening ceremony of Asian Games 2023 in China. Wishing our athletes a successful event 🇮🇳👏 pic.twitter.com/568535JSdz

— Indian Tech & Infra (@IndianTechGuide)

 

19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் இன்று முதல் அக்டோபர் 8 வரை நடைபெறுகிறது. இதில் சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். pic.twitter.com/qWWRiMdxWp

— Idam valam (@Idam_valam)

 

click me!