MS Dhoni Ad Shooting: மோகன்லால் உடன் இணைந்து விளம்பரத்தில் நடிக்கும் தோனி: வைரலாகும் புகைப்படம்!

By Rsiva kumar  |  First Published Sep 23, 2023, 5:12 PM IST

மலையாள நடிகர் மோகன்லால் உடன் இணைந்து நடிக்கும் எம்.எஸ்.தோனியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்ளில் வைரலாகி வருகிறது.


இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தனது ஓய்வு காலத்தை சிறப்பாக கொண்டாடி வருகிறார். தோனி தலைமையிலான இந்திய அணி 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, 2011 ஒரு நாள் உலகக் கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, 2010 மற்றும் 2016 ஆசிய கோப்பை டிராபியை கைப்பற்றியது.

ரூ.450 கோடி பட்ஜெட், வாரணாசி கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி!

Tap to resize

Latest Videos

கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி தோனி அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால், அதன் பிறகு ஐபிஎல் போட்டிகளில் மட்டும் பங்கேற்று வந்தார். நடந்து முடிந்த ஐபிஎல் 16ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியனானது.

இந்திய அணியின் உலகக் கோப்பைக்கான புதிய ஜெர்சியை பிரதமருக்கு வழங்கிய சச்சின்!

இதையடுத்து தோனி அடுத்த சீசனுக்காக தன்னை தயார்படுத்தி வரும் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ, புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலானது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் தோனி அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்தார். பல நிறுவனங்களின் விளம்பர தூதராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில், தோனி விளம்பரம் ஒன்றில் நடக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில், மலையாள நடிகர் மோகன்லால் உடன் இணைந்து நடித்து வருகிறார். ஆனால், அது என்ன விளம்பரம் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த சச்சின், ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர்!

எனினும், அந்த விளம்பரத்தில் தோனி @Kushmahi7 என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பேப்பர் ஒன்றை கையில் வைத்திருப்பது போன்றும், அவர் சிவப்பு நிற டீஷர்ட் மற்றும் பேண்ட் அணிந்தபடி நிற்கிறார். அவருக்கு அருகாமையில் மோகன்லால் பச்சை நிற சட்டையுடன் வெள்ளை நிற வேஷ்டியுடன் நிற்கிறார். இந்த புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வாரணாசியில் ரூ.450 கோடி செலவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: 23ம் ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்!

 

MS Dhoni with Mohanlal for an Ad shoot. pic.twitter.com/Ypy5eV4cgT

— Mufaddal Vohra (@mufaddal_vohra)

 

click me!