இந்திய அணியின் உலகக் கோப்பைக்கான புதிய ஜெர்சியை பிரதமருக்கு வழங்கிய சச்சின்!

Published : Sep 23, 2023, 02:45 PM IST
இந்திய அணியின் உலகக் கோப்பைக்கான புதிய ஜெர்சியை பிரதமருக்கு வழங்கிய சச்சின்!

சுருக்கம்

வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதான அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் உலகக் கோப்பைக்கான புதிய ஜெர்சியை வழங்கியுள்ளார்.

சிறந்த ஆன்மீக தலமாக விளங்கும் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். தற்போது அதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு இன்று பிரதமர் மோடி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு வருகை தந்துள்ளார். இந்த அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, கிரிக்கெட் ஜாம்பவான்களான ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த சச்சின், ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர்!

வாரணாசியில் உள்ள கஞ்சாரி பகுதியில் ரூ.450 கோடி செலவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்படவுள்ளது. கிட்டத்தட்ட 31 ஏக்கர் பரப்பரளவில் கட்டப்படும் இந்த மைதானம் 30,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டப்பட உள்ளது. டிஸ்ப்ளே ஸ்கோர்போர்டு, ஃப்ளட் லைட்கள், கார்ப்பரேட் பாக்ஸ்கள், பயிற்சிப் பகுதிகள், விஐபி ஓய்வறைகள், செய்தியாளர் சந்திப்பு மண்டலம் மற்றும் அலுவலகப் பகுதிகள் என்று அனைத்து வசதிகளுடன் கூடியதாக இந்த மைதானம் கட்டப்படவுள்ளது.

வாரணாசியில் ரூ.450 கோடி செலவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: 23ம் ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்!

இந்த நிலையில், தான் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் இந்தியாவில் நடக்க உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சியை ஐசிசி வெளியிட்டது. அதுமட்டுமின்றி உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தான் இன்று வாரணாசிக்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியின் புதிய ஜெர்சியை வழங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் செயலாளர் ஜெய் ஷா இணைந்து பிரதமர் மோடிக்கு பேட்டை பரிசாக வழங்கியுள்ளனர்.

India vs Australia: ஆஸியை கண்டால் பயமா? ஹாட்ரிக் கோல்டன் டக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யகுமார் யாதவ்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?