Paris 2024 Olympics: வில்வித்தையில் தீபிகா குமாரி அசத்தல் – 16ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்!

By Rsiva kumar  |  First Published Jul 31, 2024, 7:10 PM IST

பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடரின் இன்று நடந்த மகளிர் வில்வித்தை போட்டியில் 32ஆவது சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெற்றி பெற்று 16ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.


பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இதுவரையில் நடைபெற்ற போட்டிகளில் இந்தியா துப்பாக்கி சுடுதலில் 2 பதக்கங்களை வென்றது. மகளிருக்கான தனிநபர் பிரிவில் 10மீர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார். இதே போன்று கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது.

Paris 2024: 50மீ ஏர் ரைபிள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரராக ஸ்வப்னில் குசலே சாதனை!

Latest Videos

undefined

இந்த நிலையில் தான் 5ஆவது நாளான இன்று நடைபெற்ற வில்வித்தை போட்டியில் 64ஆவது சுற்று போட்டியில் எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த பர்னத் ரீனா என்பவரை எதிர்கொண்டார். இதில் 6-5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று 32ஆவது சுற்றுக்கு முன்னேறினார். இதில், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த குயிண்டி ரோயெஃப்பனை எதிர்கொண்டார். இதில், 6-2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று 16ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

Paris 2024 Medal Table: 26 பதக்கங்கள் கைப்பற்றினாலும் அமெரிக்காவிற்கு 6ஆவது இடம்; இந்தியாவிற்கு 33ஆவது இடம்!

இதில், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மைக்கேல் க்ரோப்பனை எதிர்கொள்கிறார். இந்தப் போட்டி ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெறுகிறது. இதே போன்று இன்று நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 75 கிலோ எடைப்பிரிவில் 16ஆவது சுற்றில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்ஹகைன், நார்வே நாட்டைச் சேர்ந்த சன்னிவா ஹாப்ஸ்டாட்டை எதிர்கொண்டார். இதில், 5-0 என்ற கணக்கில் லோவ்லினா போர்ஹகைன் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மகளிருக்கான ஒற்றையர் பிரிவு குரூப் சுற்று போட்டியில் வெற்றி பெற்ற பிவி சிந்து 16ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்!

click me!