Paris 2024: 50மீ ஏர் ரைபிள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரராக ஸ்வப்னில் குசலே சாதனை!

Published : Jul 31, 2024, 05:22 PM IST
Paris 2024: 50மீ ஏர் ரைபிள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரராக ஸ்வப்னில் குசலே சாதனை!

சுருக்கம்

பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் 5ஆவது நாளான இன்று நடைபெற்ற 50மீ ஏர் ரைபிள் 3 பொஷிசன்ஸ் பிரிவில் தகுதிச் சுற்று போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசலே 7ஆவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 33ஆவது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், 5ஆவது நாளான இன்று துப்பாக்கி சுடுதல் 50மீ ஏர் ரைபிள் 3 பொஷிசன்ஸ் போட்டி நடைபெற்றது. ஆண்களுக்கான தனிநபர் போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசலே போட்டியிட்டார்.

Paris 2024 Medal Table: 26 பதக்கங்கள் கைப்பற்றினாலும் அமெரிக்காவிற்கு 6ஆவது இடம்; இந்தியாவிற்கு 33ஆவது இடம்!

இவரை போன்று ஐஸ்வரி பிரதாப் சிங் தோமரும் போட்டியிட்டார். பிற்பகல் 12.30 மணிக்கு நடைபெற்ற இந்தப் போட்டியில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 12 சுற்றுகளில் 589 புள்ளிகள் பெற்று 11ஆவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறினார். ஆனால், ஆசிய சாம்பியனான ஸ்வப்னில் குசலே சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முதல் 8 இடங்களுக்குள் வந்தார். அவர், 590 புள்ளிகள் பெற்று 7ஆவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மகளிருக்கான ஒற்றையர் பிரிவு குரூப் சுற்று போட்டியில் வெற்றி பெற்ற பிவி சிந்து 16ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்!

தற்போது நடைபெற்று வரும் பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் இந்தியா 2 வெண்கலப் பதக்கம் வென்று பதக்கப் பட்டியலில் 35ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மகளிருக்கான தனிநபர் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார். இதே போன்று கலப்பு இரட்டையர் பிரிவில் சரப்ஜோத் சிங் மற்றும் மனு பாக்கர் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது.

India vs Sri Lanka: ஒரே ஓவரில் 2 விக்கெட் எடுத்த ரிங்கு சிங், சூர்யகுமார் யாதவ் – அது தான் டர்னிங் பாய்ண்ட்!

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!