Paris 2024 Medal Table: 26 பதக்கங்கள் கைப்பற்றினாலும் அமெரிக்காவிற்கு 6ஆவது இடம்; இந்தியாவிற்கு 33ஆவது இடம்!

By Rsiva kumar  |  First Published Jul 31, 2024, 4:08 PM IST

பாரிஸ் ஒலிம்பிக் 2024 பதக்க பட்டியலில் இந்தியா 2 வெண்கலப் பதக்கத்துடன் பதக்கபட்டியலில் 33ஆவது இடத்தில் உள்ளது.


பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் கடந்த 26ஆம் தேதி தொடக்க விழாவுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் 4 நாட்கள் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில், நீச்சல், டென்னிஸ், ரோவிங் ஆகிய போட்டிகளில் பதக்கமே இல்லாமல் இந்தியா வெளியேறியது. இது தவிர துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் முதல் முறையாக இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தார்.

மகளிருக்கான ஒற்றையர் பிரிவு குரூப் சுற்று போட்டியில் வெற்றி பெற்ற பிவி சிந்து 16ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்!

Latest Videos

undefined

இதையடுத்து நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடியானது இந்தியாவிற்கு 2ஆவது வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்தது. ஆண்களுக்கான டிராப் பிரிவில் தமிழக வீரர் பிரித்விராஜ் தொண்டைமான் 21ஆவது இடம் பிடித்து வெளியேறினார். வில்வித்தையில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் தீரஜ் பொம்மதேவரா தோல்வி அடைந்து வெளியேறினார்.

இதே போன்று ஒரு அணியாக வில்வித்தையில் பங்கேற்ற தீரஜ் பொம்மதேவரா, தருண்தீப் ராய், பிரவீன் ரமேஷ் ஜாதவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி காலிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது. இதே போன்று மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் அங்கீதா பகத் 64ஆவது சுற்று போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

India vs Sri Lanka: ஒரே ஓவரில் 2 விக்கெட் எடுத்த ரிங்கு சிங், சூர்யகுமார் யாதவ் – அது தான் டர்னிங் பாய்ண்ட்!

மேலும், பஜன் கவுர், தீபிகா குமாரி, அங்கீதா பகத் ஆகியோர் அடங்கிய குழு காலிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது. இதே போன்று குத்துச்சண்டை அமித் பங்கல் ஆண்களுக்கான 51கிலோ எடைப்பிரிவில் தோல்வி அடைந்து 16ஆவது சுற்று போட்டியுடன் வெளியேறினார். மகளிருக்கான 54 கிலோ எடைப்பிரிவில் பிரீதி பவர் 16ஆவது சுற்று போட்டியுடன் தோல்வி அடைந்து வெளியேறினார்.

இந்த நிலையில் தான் பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்தியா 2 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 33ஆவது இடம் பிடித்துள்ளது. தற்போது அமெரிக்கா 26 பதக்கங்களுடன் 6ஆவது இடத்தில் உள்ளது. தங்கப் பதக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பதக்கப்பட்டியல் தயாரிக்கப்படுவதால் அமெரிக்கா 4 தங்க பதக்கங்களை கைப்பற்றி 6ஆவது இடம் பிடித்துள்ளது.

சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி – 3ஆவது முறையாக இலங்கையை ஒயிட்வாஷ் செய்து இந்தியா சாம்பியன்!

கடந்த 2021 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி மற்றும் 33 வெண்கலப் பதக்கத்துடன் மொத்தமாக 113 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருந்தது. அமெரிக்காவைத் தொடர்ந்து சீனா 38 தங்கம், 32 வெள்ளி மற்றும் 19 வெண்கலப் பதக்கம் உள்பட மொத்தமாக 89 பதக்கங்களுடன் 2ஆவது இடம் பிடித்திருந்தது. ஆனால், தற்போது 4 தங்கம், 11 வெள்ளி மற்றும் 11 வெண்கலப் பதக்கம் என்று மொத்தமாக 26 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

click me!