மகளிருக்கான ஒற்றையர் பிரிவு குரூப் சுற்று போட்டியில் வெற்றி பெற்ற பிவி சிந்து 16ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்!

By Rsiva kumarFirst Published Jul 31, 2024, 2:12 PM IST
Highlights

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது நாள் போட்டியில் பிவி சிந்து குரூப் சுற்று போட்டியில் வெற்றி பெற்று 16ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இதுவரையில் விளையாடிய 4 நாட்களில் இந்தியா 2 வெண்கலப் பதக்கங்கள் வென்றது. துப்பாக்கி சுடுதல் 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் இந்தியாவிற்கு 2ஆவது வெண்கலப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தது. இதன் மூலமாக ஒலிம்பிக் தொடரில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மனு பாக்கர் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக மகளிருக்கான 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார்.

India vs Sri Lanka: ஒரே ஓவரில் 2 விக்கெட் எடுத்த ரிங்கு சிங், சூர்யகுமார் யாதவ் – அது தான் டர்னிங் பாய்ண்ட்!

Latest Videos

இந்த நிலையில் தான் இன்று நடைபெற்ற 5ஆவது நாளில் பேட்மிண்டன் போட்டியில் மகளிருக்கான குரூப் சுற்று போட்டியில் இந்திய வீராங்கனையான பிவி சிந்து எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த கிரிஸ்டின் கூபாவை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை 21-5 என்று கைப்பற்றிய சிந்து, 2ஆவது செட்டை 21-10 என்று கைப்பற்றி 16ஆவது சுற்று போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்னதாக மகளிருக்கான இரட்டையர் பிரிவு போட்டியில் இந்திய ஜோடியான தனிஷா க்ராஸ்டோ மற்றும் அஸ்வினி பொன்னப்பா தோல்வி அடைந்து குரூப் சுற்று போட்டியுடன் வெளியேறியது.

சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி – 3ஆவது முறையாக இலங்கையை ஒயிட்வாஷ் செய்து இந்தியா சாம்பியன்!

click me!