ஜப்பானில் நடந்து வரும் ஆசிய ரேஸ் வாக்கிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 20 கிமீ தடகளப் பிரிவில் இந்தியாவின் அக்ஷ்தீப் சிங் தங்கப் பதக்கமும், பிரியாங்கா கோஸ்வாமி வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆசிய தடகள சங்கம் சார்பில் ஜப்பானில் நோமி பகுதியில் ஆசிய ரேஸ் வாக்கிங் சாமியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்த இந்த தடகளப் போட்டி கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பானில் இன்று நடத்தப்பட்டுள்ளது.
காலை முதல் மிதமான மழை; முழுசா தார்பாயால் மூடப்பட்ட விசாகப்பட்டினம் மைதானம்: டாஸ் தாமதம் ஏற்படுமா?
undefined
இதில் ஆண்களுக்கான 20 கிமீ பிரிவில் அக்ஷ்தீப் சிங், சூரஜ் பன்வார், விகாஸ் சிங், பரம்ஜீத் சிங் பிஸ்ட், ஹர்தீப் சிங் ஆகியோரும், பெண்களுக்கான 20 கிமீ பிரிவில் பிரியங்கா கோஸ்வாமி, பாவ்னா ஜாட், சோனல் சுக்வால், முனிடா ப்ரஜாபதி ஆகியோரும் கலந்து கொண்டனர். எனினும், ஆண்களுக்கான 20 கிமீ பிரிவில் இந்தியாவின் சார்பில் அக்ஷ்தீப் சிங் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதே போன்று இந்தியாவுக்காக பெண்களுக்கான 20 பிரிவில் கலந்து கொண்ட பிரியங்கா கோஸ்வாமி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
கிறிஸ் கெயிலைத் தொடர்ந்து வரலாற்று சாதனை படைத்த ஷோஃபி டிவைன்!
உலக தடகள சாம்பியன்ஷிப் 2023 மற்றும் வரும் 2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடக்கும் ஒலிம்பிக்கில் இந்திய தடகள வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்வதற்கு இந்த ஆசிய ரேஸ் வாக்கிங் சாபியன்ஷிப் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. கடந்த மாதம் ஜார்க்கண்டில் நடந்த தேசிய ஓபன் ரேஸ் வாக்கிங் சாம்பியன்ஷிப்பில் உலக சாம்பியன்ஷிப் மற்றும் பாரிஸ் விளையாட்டுகளில் தனது இடத்தைப் பிடித்த இந்திய ரேஸ் தடகள வீரர் அக்ஷ்தீப் சிங், ஜப்பான் நாட்டின் நோமியில் நடந்த ஆண்களுக்கான 20 கிமீ ரேஸ் வாக்கிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
இதே போன்று, கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி உலக் சாம்பியன்ஷிப் மற்றும் பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இவரைத் தொடர்ந்து, விகாஸ் சிங், பரம்ஜீத் சிங் பிஸ்ட் ஆகியோரும் உலக சாம்பியன்ஷீப் மற்றும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.