கோல்டன் குளோப் பந்தயத்தில் அபிலாஷ் டோமி இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
கோல்டன் குளோப் ரேஸ் 2022ல், ஏப்ரல் 29, 2023 அன்று, ஓய்வுபெற்ற இந்திய கடற்படை கமாண்டர் அபிலாஷ் டோமி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். ஒரு தனிநபராக, பிறர் உதவியின்றி உலகை சுற்றும் பாய்மரப் பந்தயத்தில் போடியம் முடித்த முதல் இந்தியர் என்ற வரலாற்றைப் படைத்தார். இந்த போட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி தொடங்கியது. அபிலாஷ் டாமி பயணித்த Bayanat என்ற சிறிய படகு, 1968 இல் இருந்த தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தனியாக உலகைச் சுற்றி வந்தது. 236 நாட்களுக்குப் பிறகு, அபிலாஷ் டாமி அதே துறைமுகத்திற்குத் திரும்பினார்.
ஆனால் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த கிர்ஸ்டன் நியூஷேஃபர் ஒரு நாள் முன்னதாக அந்த துறைமுகத்திற்கு சென்றதால், அவர் இந்த பந்தயத்தில் வெற்றி பெற்றார். கோல்டன் குளோப் போட்டியில் முதல்முறையாக பெண் ஒருவர் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார். கோல்டன் குளோப் பந்தயத்தில் அபிலாஷ் டோமி இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
இதையும் படிங்க : 48 மணிநேரத்தில் 9 மாணவர்கள் தற்கொலை.. தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சோகம்..
கோல்டன் குளோப் ரேஸ், கடல்சார் சாகசத்தின் எவரெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது மற்ற விளையாட்டுகளை விட சவாலானது. போட்டியில் பங்கேற்கும் மாலுமிகள் இயற்கையின் சவால்களையும், உடல் மற்றும் மனரீதியான சவால்களையும் சமாளிக்க வேண்டும்.
அபிலாஷ் பயணித்த கப்பலான Bayanat நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹசன் அல் ஹொசானி கூறுகையில், “கோல்டன் குளோப் பந்தயத்தில் அபிலாஷ் இந்த அளவிற்கு முன்னேறியதற்காக நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம், இது எங்களை மகத்தான போற்றுதலால் நிரப்பியுள்ளது. மனித வரம்புகளை சோதிக்கும் அத்தகைய வலிமையான சகிப்புத்தன்மையின் ஒரு பகுதியாக இருப்பதற்காக உண்மையிலேயே பெருமைப்படுகிறார். அபிலாஷ் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்திய சமூகத்திற்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளார். அவரது இந்த சாதனை சந்தேகத்திற்கு இடமின்றி வரும் தலைமுறைகளை ஊக்குவிக்கும்..” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் முதன்முறையாக இந்த சாதனையை படைத்திருக்கும் அபிலாஷ் டாமிக்கு ஐபிஎல் மோகத்தால் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது. ஐபிஎல் சீசன் கோல்டன் குளோப் பந்தயத்தை மூழ்கடித்துவிட்டது என்றும் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். கோல்டன் குளோப் பந்தயத்திற்கு மற்ற விளையாட்டுகளை விட அதிக உடல் மற்றும் மன உறுதி தேவைப்படுகிறது ஆனால் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : சோனியா காந்தியை விஷக்கன்னி என்று விமர்சித்த பாஜக எம்.எல்.ஏ.. கர்நாடகாவில் தொடரும் விஷ அரசியல்