IPL 2023: ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோரை அடித்து லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் சாதனை.! 20 ஓவரில் 257 ரன்கள்

By karthikeyan V  |  First Published Apr 28, 2023, 9:28 PM IST

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, 20 ஓவரில் 257 ரன்களை குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் இதுதான் ஒரு அணி அடித்த 2வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். 258 ரன்கள் என்ற மிகக்கடினமான இலக்கை பஞ்சாப் அணி விரட்டுகிறது. 
 


ஐபிஎல் 16வது சீசனின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. மொஹாலியில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

Tap to resize

Latest Videos

அதர்வா டைட், ஷிகர் தவான் (கேப்டன்), சிக்கந்தர் ராஸா, லியாம் லிவிங்ஸ்டன், சாம் கரன், ஜித்தேஷ் ஷர்மா, ஷாருக்கான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், குர்னூர் பிரார், அர்ஷ்தீப் சிங்.

IPL 2023: நான் நெனச்சது தப்பு ஆகிருச்சு..! அந்த 2 பசங்க தான் எங்க தோல்விக்கு காரணம்.. தோனி அதிரடி

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ருணல் பாண்டியா, நிகோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, நவீன் உல் ஹக், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், யஷ் தாகூர்.

முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான கேஎல் ராகுல் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான கைல் மேயர்ஸ் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 24 பந்தில் 54 ரன்கள் அடித்தார். 3ம் வரிசையில் இறங்கிய ஆயுஷ் பதோனி மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் இணைந்து பஞ்சாப் பவுலிங்கை பதம் பார்த்தனர்.

பதோனி - ஸ்டோய்னிஸ் இருவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 89 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடிய பதோனி 24 பந்தில் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த ஸ்டோய்னிஸ் 40 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 72 ரன்களை குவிக்க, நிகோலஸ் பூரன் தன் பங்கிற்கு காட்டடி அடித்து 19 பந்தில் 45 ரன்களை விளாச, 20 ஓவரில் 257 ரன்களை குவித்தது.

IPL 2023: தோனியின் வெற்றி மந்திரம் இதுதான்..! ஹர்பஜன் சிங் கருத்து

ஐபிஎல் வரலாற்றில் இதுதான் 2வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். ஆர்சிபி அணி 2013ல் புனே வாரியர்ஸுக்கு எதிராக அடித்த 263 ரன்கள் தான் ஐபிஎல்லின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அதற்கடுத்த இடத்தை பிடித்து சாதனை படைத்தது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி. 258 ரன்கள் என்ற மிகக்கடினமான இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி விரட்டுகிறது.
 

click me!