IPL 2023: PBKS vs LSG டாஸ் ரிப்போர்ட்..! பஞ்சாப் கிங்ஸ் அணியில் 2 அதிரடி மாற்றங்கள்.. ஃபாஸ்ட் பவுலர் அறிமுகம்

By karthikeyan V  |  First Published Apr 28, 2023, 7:25 PM IST

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
 


ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த சீசனில் இதுவரை ஆடிய தலா  7 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

மொஹாலியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். தோள்பட்டை வலி காரணமாக கடந்த சில போட்டிகளில் ஆடாத ஷிகர் தவான் இந்த போட்டியில் ஆடுகிறார்.

Tap to resize

Latest Videos

IPL 2023: நான் நெனச்சது தப்பு ஆகிருச்சு..! அந்த 2 பசங்க தான் எங்க தோல்விக்கு காரணம்.. தோனி அதிரடி

பஞ்சாப் கிங்ஸ் அணியில் மேத்யூ ஷார்ட்டுக்கு பதிலாக சிக்கந்தர் ராஸா ஆடுகிறார். குர்னூர் பிரார் என்ற ஃபாஸ்ட் பவுலர் பஞ்சாப் கிங்ஸ் அணியில் அறிமுகமாகிறார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

அதர்வா டைட், ஷிகர் தவான் (கேப்டன்), சிக்கந்தர் ராஸா, லியாம் லிவிங்ஸ்டன், சாம் கரன், ஜித்தேஷ் ஷர்மா, ஷாருக்கான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், குர்னூர் பிரார், அர்ஷ்தீப் சிங்.

IPL 2023: தோனியின் வெற்றி மந்திரம் இதுதான்..! ஹர்பஜன் சிங் கருத்து

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ருணல் பாண்டியா, நிகோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, நவீன் உல் ஹக், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், யஷ் தாகூர்.
 

click me!