இலங்கை ஸ்பின்னர் பிரபாத் ஜெயசூரியா டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இலங்கை - அயர்லாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என ஒயிட்வாஷ் செய்து இலங்கை அணி வென்றது. 2 டெஸ்ட் போட்டிகளிலுமே இலங்கை அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை அணி, 2வது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் 492 ரன்களை குவித்தது. கேப்டன் பால்பிர்னி 95 ரன்கள் அடித்தார். கர்டிஸ் காம்ஃபெர் (111) மற்றும் பால் ஸ்டர்லிங்கின் (103) அபாரமான சதங்களால் 492 ரன்களை குவித்தது அயர்லாந்து அணி. இலங்கை அணியில் அபாரமாக பந்துவீசிய பிரபாத் ஜெயசூரியா 5 விக்கெட் வீழ்த்தினார்.
IPL 2023: நான் நெனச்சது தப்பு ஆகிருச்சு..! அந்த 2 பசங்க தான் எங்க தோல்விக்கு காரணம்.. தோனி அதிரடி
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி, நிஷான் மதுஷ்கா(205), குசால் மெண்டிஸ்(245) ஆகிய இருவரின் அபாரமான இரட்டை சதங்கள் மற்றும் கேப்டன் கருணரத்னே(115), ஆஞ்சலோ மேத்யூஸ்(100) ஆகிய இருவரின் சதங்களால் முதல் இன்னிங்ஸில்704 ரன்களை குவித்தது.
212 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய அயர்லாந்து அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
IPL 2023: பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டும், 2வது இன்னிங்ஸில் 2 விக்கெட்டும் வீழ்த்திய இலங்கை ஸ்பின்னர் பிரபாத் ஜெயசூரியா 50 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். வெறும் ஏழே டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டிய பிரபாத் ஜெயசூரியா, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட் வீழ்த்திய முதல் ஸ்பின்னர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன், ரவிச்சந்திரன் அஷ்வின், நேதன் லயன் என டெஸ்ட் கிரிக்கெட்டின் எப்பேர்ப்பட்ட ஸ்பின் லெஜண்டும் இவ்வளவு வேகமாக 50 விக்கெட்டுகளை டெஸ்ட்டில் வீழ்த்தியதில்லை.