
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 186 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் இந்த செஸ் ஒலிம்பியாடில் கலந்துகொண்டு விளையாடிவருகின்றனர்.
செஸ் ஒலிம்பியாடில் கலந்துகொண்டுள்ள பாலஸ்தீனத்தை சேர்ந்த 8 வயது ராண்டா செடார் என்ற சிறுமியை அனைவரும் வியந்து பார்க்கின்றனர்.
இதையும் படிங்க - செஸ் ஒலிம்பியாட்:2வது சுற்றில் தமிழக வீரர்கள் அபார வெற்றி! பிரக்ஞானந்தா, அதிபன், கார்த்திகேயன், நந்திதா வெற்றி
பாலஸ்தீனத்தை சேர்ந்த 8 வயது சிறுமியான ராண்டா செடார் 5 வயதில், அவரது தந்தையிடமிருந்து செஸ் விளையாட்டை கற்றிருக்கிறார். செஸ் ஆட கற்ற, அடுத்த மூன்றே ஆண்டுகளில் தனது நாட்டிற்காக சர்வதேச செஸ் ஒலிம்பியாடில் கலந்துகொள்ளும் அளவிற்கு திறமையானவர் ராண்டா.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொண்டதில் இளம் வயது வீராங்கனை இவர் தான். செஸ் ஒலிம்பியாட் 2வது சுற்றில் கோமோராஸ் வீராங்கனை பஹிமா அலி முகமதுவை எதிர்கொண்ட ராண்டா, 39வது நகர்த்தலில் அவரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இதையும் படிங்க - செஸ் ஒலிம்பியாட்: ஒரு செஸ் போர்டின் விலை ரூ.30,000.. அப்படி இந்த போர்டில் என்னதான் இருக்கு..?
4 பேர் அடங்கிய பாலஸ்தீன அணி, கோமோராஸ் அணியை 4-0 என வீழ்த்தி வெற்றி பெற்றது. 8 வயது இளம் வீராங்கனையான ராண்டா செடார், கிராண்ட்மாஸ்டர் பட்டம் வெல்வதே தனது இலட்சியம் என தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.