CWG 2022: இந்தியா - பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை..! டாஸ் ரிப்போர்ட்

By karthikeyan VFirst Published Jul 31, 2022, 4:21 PM IST
Highlights

காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் கிரிக்கெட் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்துவருகிறது. காமன்வெல்த் போட்டிகளில் முதல் முறையாக மகளிர் டி20 கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்திய மகளிர் அணி முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட நிலையில், அந்த போட்டியில் தோல்வியடைந்தது. எனவே 2வது போட்டியில் வெற்றி வேட்கையில் இருந்த இந்திய அணி இன்று பாகிஸ்தானுடன் மோதுகிறது.

இதையும் படிங்க - காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு 2வது தங்கம்.! பளுதூக்குதலில் இந்தியாவின் ஜெரெமி தங்கம் வென்றார்

காமன்வெல்த்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதும் போட்டி பர்மிங்காமில் நடந்துவருகிறது. பிற்பகல் 3 மணிக்கு டாஸ் போட்டு, 3.30 மணிக்கு போட்டி தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் மழை காரணமாக ஆட்டம் தாமதமானது. 3.55 மணிக்கு டாஸ் போடப்பட்டு 4.10 மணிக்கு போட்டி தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இதையும் படிங்க - WI vs IND: 2வது டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி.! என்னென்ன மாற்றங்கள்..?

இந்திய மகளிர் அணி:

ஸ்மிரிதி மந்தனா, ஷஃபாலி வெர்மா, யஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், சபினேனி மேகனா, தீப்தி ஷர்மா, ராதா யாதவ், ஸ்னே ராணா, மேக்னா சிங், ரேணுகா சிங்.

பாகிஸ்தான் மகளிர் அணி:

இராம் ஜாவேத், முனீபா அலி (விக்கெட் கீப்பர்), ஒமைமா சொஹைல், பிஸ்மா மரூஃப் (கேப்டன்), ஆலியா ரியாஸ், ஆய்ஷா நசீம், கைனத் இம்டியாஸ், ஃபாத்திமா சனா, துபா ஹசன், டயானா பைக், அனம் அமின்.
 

click me!