WI vs IND: 2வது டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி.! என்னென்ன மாற்றங்கள்..?

By karthikeyan V  |  First Published Jul 31, 2022, 3:25 PM IST

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 


இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டி20 போட்டி ஆகஸ்ட் 1 (நாளை) நடக்கிறது.

இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

Latest Videos

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. முதல் டி20 போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இந்திய அணி களமிறங்கும்.

இதையும் படிங்க - ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..! தீபக் சாஹர், வாஷிங்டன் சுந்தர் கம்பேக்

முதல் போட்டியில் 3ம் வரிசை வீரராக தீபக் ஹூடா / ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரில் யார் இறக்கப்படுவார் என்பது கேள்வியாக இருந்த நிலையில், ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் ஷ்ரேயாஸ் ஐயர் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஆனால் அதற்காக அடுத்த போட்டியில் அவரை நீக்கிவிட்டு தீபக் ஹூடாவிற்கு வாய்ப்பளிக்க முடியாது. எனவே ஷ்ரேயாஸ் ஐயர் தான் இந்த போட்டியிலும் ஆடுவார்.

பவுலிங் காம்பினேஷனிலும் எந்த மாற்றத்திற்கான அவசியமில்லை. முதல் டி20 போட்டியில் இந்திய பவுலர்கள் சிறப்பாகத்தான் பந்துவீசினார்கள்.

இதையும் படிங்க - WI vs IND: அந்த பையன் எங்கே.? என்னடா டீம் செலக்‌ஷன் இது.? அதிரடி வீரரின் புறக்கணிப்பு.. ஸ்ரீகாந்த் கொந்தளிப்பு

2வது டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ரவிச்சந்திரன் அஷ்வின், அர்ஷ்தீப் சிங்.
 

click me!