‘தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி’ ஆரம்பம்….! நவம்பர் 25 முதல் கோலாகல தொடக்கம் !

By manimegalai aFirst Published Nov 22, 2021, 8:15 AM IST
Highlights

64வது தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி வரும், 25ம் தேதி முதல் மத்திய பிரதேசம் மாநிலம், போபாலில் நடக்கிறது.  

64வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி, வரும்  நவம்பர் 25 முதல், மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள, பிஷன்கேடியில்  அமைந்து ஒத்திருக்கும் ‘மத்திய பிரதேச துப்பாக்கி சுடுதல் அகாடமியில்’ (MPSA) தொடங்குகிறது. துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டியை இந்திய விளையாட்டு துறை மற்றும் இந்திய தேசிய துப்பாக்கி சங்கமான என்.ஆர்.ஏ.ஐ விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. 

இப்போட்டியில் நாடு முழுவதும் உள்ள 4,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். கடந்த புதன்கிழமை முதல் அனைத்து துப்பாக்கி சுடும் வீரர்களும் பயிற்சி செய்து வருகின்றனர். இங்கு வரும்  துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு,  உலகத் தரம் வாய்ந்த அனைத்து வசதிகளும் வழங்கப்படும் என்றும், அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவர்களின் செயல்திறன் மதிப்பாய்வு செய்யப்படும் என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

மேலும் அவர்கள் கூறியதாவது, ‘ மேலும் சர்வதேச நிகழ்வுகள் இங்கு விரைவில்  நடைபெறும் என்பதால் இந்த அகாடமி முழுவதும் ஏர் கண்டிஷனிங் போன்ற பல வசதிகள் செய்யப்பட்டு நவீன முறையில் சீரமைக்கப்பட்டிருக்கிறது.அதுமட்டும் இல்லாமல், இங்கு மேலும் ஊக்கமருந்து சோதனை அறை, மருத்துவ அறை, வீரர்கள் லாபி, மாநாட்டு அறை, உடற்பயிற்சி கூடம், ஒரு அதிநவீன சாப்பாட்டு கூடம் மற்றும் ஒரு சமையலறை மற்றும் பிற வசதிகளும் உள்ளது. 

அகாடமியில் ஒரு புதியதாக ‘பசுமை’ கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது தோட்டத்துடன், இயற்கையை ரசிக்குமாறு பல்வேறு வசதிகளுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. கடந்த  2015 ஆம் ஆண்டில், துப்பாக்கி சுடும் விளையாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் இந்த  அகாடமி விரிவுபடுத்தப்பட்டது. போபாலில் உள்ள கோரா கிராமத்தில் 37.16 ஏக்கர் நிலத்தில் இந்த  எம்.பி  ஸ்டேட் ஷூட்டிங் அகாடமி கட்டப்பட்டது. 

இது மூன்று ட்ராப் மற்றும் ஸ்கீட் வரம்புகளுடன் 50-மீட்டர் ஷூட்டிங்  வரம்பையும் கொண்டுள்ள வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. உலகத்தரம் வாய்ந்த ஷூட்டிங் தளமான இது ‘உயர் செயல்திறன்’ மையமாக தற்போது  மாற்றப்பட்டுள்ளது. பத்து மற்றும் 50 ரேஞ்ச் அளவிலான போட்டிகள் தற்போது தேசிய அளவில் நடைபெற இருக்கிறது.இதன் இறுதிக்கட்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக’ போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.  

 

click me!