Zimbabwe vs India, 4th T20I: கடைசி வரை தாக்குப்பிடித்து விளையாடி 152 ரன்கள் குவித்த ஜிம்பாப்வே!

By Rsiva kumar  |  First Published Jul 13, 2024, 6:44 PM IST

இந்திய அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் குவித்துள்ளது.


ஜிம்பாப்வே மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டி தற்போது ஹராரேயில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பவுலிங் செய்வதாக அறிவித்தார். இந்திய அணியில் துஷார் தேஷ்பாண்டே அறிமுகம் செய்யப்பட்டார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் குவித்தது. வெஸ்லி மாதெவரே மற்றும் தடிவானாஷே மருமணி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

தங்கப் பதக்கம், கோல்டன் சாண்ட் மாஸ்டர் விருது வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த சுதர்சன் பட்நாயக்!

Latest Videos

undefined

இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 63 ரன்கள் குவித்தது. மருமணி 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மாதெவரே 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த பிரையன் பென்னட் 9 ரன்களில் நடையை கட்டினார். ஜோனாதன் காம்ப்பெல் 3 ரன்னில் ரன் அவுட் செய்யப்பட்டார். அதிரடியாக விளையாடிய சிக்கந்தர் ராஸா 46 ரன்கள் எடுத்துக் கொடுத்து ஆட்டமிழந்தார். பின் வரிசையில் வந்த டியான் மியர்ஸ் 12 ரன்னிலும், கிளைவ் மடாண்டே 7 ரன்னிலும் நடையை கட்டினர். இறுதியாக ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

இந்திய அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் கலீல் அகமது 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் அறிமுகமான துஷார் தேஷ்பாண்டே, வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் சர்மா மற்றும் ஷிவம் துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இந்த போட்டியில் ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலமாக அபிஷேக் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றினார்.

ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ்வை ஓரங்கட்டி டி20 கிரிக்கெட்டில் சரித்திரம் படைத்த ருதுராஜ் கெய்க்வாட்!

click me!