நகைச்சுவையாக சொன்னேன் – தவறை உணர்ந்து சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்ட கேகேஆர் வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி!

By Rsiva kumar  |  First Published Jul 13, 2024, 3:14 PM IST

சாய்வா நேவால் கூறிய கருத்துக்கு விமர்சனம் கூறியிருந்த கேகேஆர் வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி தான் கூறியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் ஹரியானா மாநிலம் ஹிசார் என்ற பகுதியில் பிறந்தவர் சாய்னா நேவால். ஆனால், தற்போது வசித்து வருவது என்னவோ ஹைதராபாத்தில் தான். இதுவரையில் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 451 வெற்றிகளை குவித்துள்ள சாய்னா நேவால், 223 தோல்விகளை சந்தித்துள்ளார். இதுவரையில் அவர் 5 முறை தங்கம் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார். காமன்வெல்த் போட்டியில் 2010 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார். அதே ஆண்டில் நடைபெற்ற கலப்பு பிரிவில் இந்தியாவிற்காக தங்கம் வென்று கொடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

Latest Videos

undefined

கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற சாய்னா 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சில ஆண்டுகள் போட்டியில் விளையாடாமல் இருந்தார். இந்த நிலையில் தான் கிரிக்கெட் குறித்து சாய்னா நேவால் பேசிய வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் உடல் ரீதியிலான விளையாட்டாக கிரிக்கெட் இல்லாவிட்டாலும் இந்தியாவில் கணிசமான அளவு கவனத்தை பெறுவது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

தோனி முதல் காம்பீர் வரையில் அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிரிக்கெட் பிரபலங்கள்!

பேட்மிண்டன், டென்னிஸ் மற்றும் கூடைப்பந்து ஆகியவற்றை கிரிக்கெட் உடன் ஒப்பிட்ட அவர் கிரிக்கெட் உடல் ரீதியிலான கடினமான விளையாட்டு அல்ல என்று குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இளம் வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: பும்ராவின் 150 கிமீ வேகத்தை உங்களது தலையில் வாங்குனா தான் தெரியும் என்று கூறியிருந்தார். இது ரசிகர்களிடையே எதிர்ப்பை வெளிப்படுத்திய நிலையில் இதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அங்கிரிஷ் ரகுவன்ஷி கூறியிருப்பதாவது: எல்லோரும் என்னை மன்னிக்கவும். நான் எனது கருத்துக்களை நகைச்சுவையாக கூறினேன். ஆனால், திரும்பிப் பார்க்கு போது மிகவும் முதிர்ச்சி அற்ற ஒரு நகைச்சுவை என்று நினைக்கிறேன். என் தவறை உணர்ந்து மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பானி வீட்டு திருமணத்திற்கு மனைவி நடாசா இல்லாமல் தன்னந்தனியாக நண்பனோடு வந்த ஹர்திக் பாண்டியா!

 

I’m sorry everyone, I meant my remarks as a joke, looking back I think it was a really immature joke. I realize my mistake and I sincerely apologize.

— Angkrish Raghuvanshi (@angkrish10)

 

click me!