ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்டுக்கும் நடந்த திருமண நிகச்சியில் இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா தனது மனைவி நடாசாஸ் ஸ்டான்கோவிச் இல்லாமல் நண்பன் இஷான் கிஷான் மற்றும் சகோதரர் குர்ணல் பாண்டியாவுடன் வந்திருந்த வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு பிரபல தொழிலதிபர் விரென் மெர்ச்சண்ட் அவர்களின் இளைய மகள் ராதிகா மெர்ச்சன்டுக்கும், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு, இந்த ஜோடியின் திருமணத்திற்கு முன்னதான கொண்டாட்டங்கள் இந்தியாவில் வெகுஜோராக கொண்டாடப்பட்டது. பல முக்கிய அரசியல் மற்றும் சினிமாத்துறை பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து இத்தாலி நாட்டு கடற்கரையில், சொகுசு கப்பலில் மூன்று நாள் பயணமாக விமர்சையாக ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முன்னதான கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இதில் தோனி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த சூழலில் நேற்று ஜூலை மாதம் 12ம் தேதி, மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில், அனந்த அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்டின் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள், WWE வீரர் ஜான் சீனா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் தான் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தனது மனைவி நடாசா ஸ்டான்கோவிச் இல்லாமல் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு தனது நண்பன் இஷான் கிஷான் மற்றும் சகோதரர் குர்ணல் பாண்டியா ஆகியோருடன் வந்துள்ளார். இதற்கு முன்னதாக, கடந்த வாரம் நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியிலும் கூட ரோகித் சர்மா தனது மனைவி ரித்திகா சஜ்டேவுடனும், சூர்யகுமார் யாதவ் தனது மனைவி தேவிஷா ஷெட்டியுடனும் வந்திருந்தனர்.
சாதனையோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஜேம்ஸ் ஆண்டர்சன், 21 வருடம் 704 விக்கெட்டுகள்!
ஆனால், ஹர்திக் பாண்டியா மட்டும் தனியாக வந்திருந்தார். அப்போதும் இஷான் கிஷான் மற்றும் குர்ணல் பாண்டியா ஆகியோருடன் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டான்கோவிச் இருவரும் பிரிய இருப்பதாக கடந்த சில மாதங்களாக செய்தி வெளியாகி வருகிறது. இது குறித்து இருவரும் மறுப்பு தெரிவிக்கவும் இல்லை. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், நடாசா ஸ்டான்கோவிச் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.