ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் 2024 தொடரின் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.
இங்கிலாந்தில் உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் 2024 தொடரின் முதல் சீசன் கடந்த 3 ஆம் தேதி தொடங்கியது. இதில், இந்தியா சாம்பியன்ஸ், ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ், பாகிஸ்தான் சாம்பியன்ஸ், இங்கிலாந்து சாம்பியன்ஸ், தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணிகள் இடம் பெற்று விளையாடின. அதாவது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்களைக் கொண்டு நடத்தப்படும் சாம்பியன்ஸ் தொடர். இந்த தொடருக்கான இந்தியா சாம்பியன்ஸ் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த தொடரில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணிகள் விளையாடிய 5 போட்டிகளில் 4ல் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்துள்ளன.
தோனி முதல் காம்பீர் வரையில் அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிரிக்கெட் பிரபலங்கள்!
undefined
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா சாம்பியன்ஸ் அணிகள் விளையாடிய 5 போட்டிகளில் 2ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 3 மற்றும் 4 ஆவது இடங்களை பிடித்தன. இந்த நிலையில் தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து நேற்று ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் மற்றும் இந்தியா சாம்பியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய இந்தியா சாம்பியன்ஸ் நிர்ண்யிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் குவித்தது.
அம்பானி வீட்டு திருமணத்திற்கு மனைவி நடாசா இல்லாமல் தன்னந்தனியாக நண்பனோடு வந்த ஹர்திக் பாண்டியா!
இதில் அதிகபட்சமாக ராபின் உத்தப்பா 65 ரன்களும், யுவராஜ் சிங் 59 ரன்களும், இர்பான் பதான் 50 ரன்களும் எடுத்தனர். யூசுப் பதான் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணியில் பீட்டர் சிடில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பின்னர் கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின் வரிசையில் களமிறங்கிய டிம் பைனே அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார். நாதன் கோல்டர் நைல் 30 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியாக ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 168 ரன்கள் மட்டுமே எடுத்து 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்துள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்திய அணியில் தவால் குல்கர்னி மற்றும் பவன் நெகி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ராகுல் சுக்லா ஹர்பஜன் சிங், இர்பான் பதான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்தியா சாம்பியன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த யுவராஜ் சிங் ஆட்டநாயகன் விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Our are on a mission for glory tonight! 🇮🇳💪 pic.twitter.com/DZNJVUs7pn
— WCL India Champions (@India_Champions)