ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ்வை ஓரங்கட்டி டி20 கிரிக்கெட்டில் சரித்திரம் படைத்த ருதுராஜ் கெய்க்வாட்!

Published : Jul 13, 2024, 05:21 PM IST
ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ்வை ஓரங்கட்டி டி20 கிரிக்கெட்டில் சரித்திரம் படைத்த ருதுராஜ் கெய்க்வாட்!

சுருக்கம்

டி20 கிரிக்கெட்டில் கடைசி 10 இன்னிங்ஸ்களில் அதிக ஸ்டிரைக்ரேட்டில் விளையாடி அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலிடம் பிடித்துள்ளார்.

டி20 கிரிக்கெட் என்றாலே அதிக ஸ்டிரைக் ரேட்டில் விளையாடக் கூடியவர் சூர்யகுமார் யாதவ். ஐசிசி ஆண்களுக்கான டி20 பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் தற்போது சூர்யகுமார் யாதவ் 2ஆவது இடத்தில் இருக்கிறார். இவருக்கு போட்டியாக தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் வலம் வருகிறார். பவர்பிளே இல்லாமல் அதிக ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி வருகிறார். டி20 கிரிக்கெட்டில் பவர்பிளே என்பது முதல் 6 ஓவர். பவர்பிளேயின் பவுண்டரி லைனில் அதிகபட்சமே 2 பீல்டர்கள் தான் இருப்பார்கள். இந்த ஓவர்களில் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க முடியும். ஆனால், அதன் பிறகு 7ஆவர் முதல் 20ஆவது ஓவர் வரையில் ரன்கள் குவிப்பது என்பது கடினம் தான்.

நகைச்சுவையாக சொன்னேன் – தவறை உணர்ந்து சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்ட கேகேஆர் வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி!

இந்த நிலையில் தான் கடைசி 10 இன்னிங்ஸ்களில் அதிக ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில், 350 ரன்களுக்கு மேல் குவித்த வீரர்கள் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் ருதுராஜ் கெய்க்வாட், ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

இதில் ருதுராஜ் கெய்க்வாட் 154 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி அதிகபட்சமாக 421 ரன்கள் குவித்துள்ளார். இதே போன்று பாபர் அசாம் 130 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி 391 ரன்கள் எடுத்துள்ளார். ரோகித் சர்மா 162 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி 378 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் டிராவிஸ் ஹெட் 157 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி 357 ரன்கள் எடுத்துள்ளார்.

தோனி முதல் காம்பீர் வரையில் அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிரிக்கெட் பிரபலங்கள்!

அதோடு மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் 149 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி 355 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், ஜோஸ் பட்லர் 160 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி 348 ரன்கள் எடுத்துள்ளார்.

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?