ஸ்டார்க் பந்தில் விளையாடுவது ஒன்றும் கஷ்டமில்லை: ஜாகீர் கான் சொன்ன ஈஸியான வழி என்ன தெரியுமா?

By Rsiva kumar  |  First Published Mar 21, 2023, 12:04 PM IST

மிட்செல் ஸ்டார்க் பந்தில் விளையாடுவது ஒன்றும் கஷ்டமான விஷயமில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் கூரியுள்ளார்.
 


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா முதலில் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் பங்கேற்றது. இதில், இடது கை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் மிக முக்கியமான வீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் இரு போட்டிகளிலும் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்தது. மூன்றாவது போட்டியும் சுழற்பந்து வீச்சுக்கு சாதமாகவே இருந்தது. முதல் 2 போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 3ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி வாகை சூடியது.

ஆபத்தான கட்டத்தில் இந்தியா: உலக நம்பர் 1 அணிக்கான ரேஸில் ஆஸ்திரேலியா!

Tap to resize

Latest Videos

கடைசி போட்டியில் முதல் நாளில் சுழல் எடுபடவில்லை. 2,3ஆவது நாளில் தான் சுழல் எடுபட ஆரம்பித்தது. எனினும், பேட்டிங்கில் அதிக ரன்கள் குவித்து ஆடிய ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் இந்தப் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை. இந்தப் போட்டி டிராவில் முடியவே டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட் கைப்பற்றினார். அதுவும், சுப்மன் கில், விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரது விக்கெட்டை கைப்பற்றினார்.

ஐபில் தொடரிலிருந்து தோனி ஒய்வு பெறுவது எப்போது? தீபக் சாஹர் வெளியிட்ட உண்மை!

இதே போன்று 2ஆவது நாள் போட்டியில் ரோகித் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், சிராஜ் ஆகியோரது விக்கெட்டை கைப்பற்றி 5 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் 117 ரன்களில் சுருட்டிய ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் பந்தில் விளையாடுவது ஒன்றும் கடினமில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் கூறியுள்ளார். இது தொடர்பாக, அவர் கூறியிருப்பதாவது:

ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய வீரர்கள் யார் யார்? எந்தெந்த அணிக்கு சிக்கல் தெரியுமா?

மிட்செல் ஸ்டார்க் ஓவரை டெஸ்ட் போட்டியில் விளையாடுவது போன்று விளையாட வேண்டும். அவர், 10 முதல் 12 ஓவர்கள் வரையில் பந்து வீசுவதற்கு வாய்ப்பிருக்கிறது. டெஸ்ட் போட்டியில் விளையாடுவது போன்று அவரது ஓவரில் விளையாட வேண்டும். பவுலர் சிறப்பான பார்மில் இருக்கும் நிலையில், அவரை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று பேட்டிங் ஆடும் வீரர்களுக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் அவரது ஓவரில் நன்கு விளையாட முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

சூர்யகுமார் யாதவ் இதுக்கு சரிப்பட மாட்டார், எதுக்கு தான் சரிப்படுவார்? பலே ஐடியா கொடுத்த தினேஷ் கார்த்திக்!

click me!