ஐபில் தொடரிலிருந்து தோனி ஓய்வு பெறுவது எப்போது என்ற தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் வெளியிட்டுள்ளார்.
கிரிக்கெட் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலேயும் ஐபிஎல் என்றால் சொல்லவே வேண்டாம். எந்த அணி டைட்டில் ஜெயிக்கும், எந்த சிறப்பாக விளையாடுவார் என்ற ஆர்வமும், எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்த வண்ணம் இருக்கும். அதிலேயும், எம்.எஸ்.தோனி, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, கேஎல் ராகுல், ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில் ஆகிய மாஸ் வீரர்கள் எப்படி விளையாடுவார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கும். ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வரும் 31 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது.
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய வீரர்கள் யார் யார்? எந்தெந்த அணிக்கு சிக்கல் தெரியுமா?
இதில் முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியனும், முதல் முறையாக டைட்டில் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியும், 4 முறை டைட்டில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த சீசனில் ரவீந்திர ஜடேஜா கேப்டனாக செயல்பட்டார். ஆனால், அவரது தலைமையிலான சென்னை அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த நிலையிலும், ஜடேஜாவிற்கு காயம் ஏற்பட்ட நிலையிலும், தோனி கேப்டனாக செயல்பட்டார். எனினும், சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. ஆனால், இந்த சீசனுக்கு ஆரம்பத்திலேயே தோனி கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
இந்திய அணிக்காக விளையாடி வந்த தோனி, டெஸ்ட், ஒரு நாள் தொடர் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். தற்போது ஐபிஎல் தொடரில் ஆடி வரும் அவர் எப்போது ஓய்வு பெறுவார் என்ற கேள்வி ஒவ்வொரு நாளும் உலா வந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக அவராகவே சென்னையில் விளையாடிய பிறகு ஓய்வு பெறுவேன் என்று கூறியிருந்தார். ஆனால், எப்போது, எந்த ஆண்டு என்று எதுவும் இல்லை. இந்த நிலையில், தான் தோனியின் ஓய்வு குறித்து முக்கியமாக தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் வெளியிட்டுள்ளார்.
மளமளவென்று சரிந்த விக்கெட் - இன்னிங்ஸ் வெற்றி பெற்று இலங்கையை ஒயிட்வாஷ் செய்த நியூசிலாந்து!
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்த சீசன் தான் தோனியின் கடைசி ஐபிஎல் சீசன் என்பதில் எந்த உறுதிப்பாடும் இல்லை. ஆனால், அடுத்த ஆண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனி தான் வழிநடத்துவார் என்று நம்புகிறேன். இந்த சீசன் தான் அவரது கடைசி ஐபிஎல் சீசன் என்று யாரும் சொல்லவில்லை. அவர் இன்னும் அதிகமாக விளையாடுவார். அதற்காகவே தீவிரமாக பயிற்சியும், உடற்பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார். அவர் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விளையாட வேண்டும்.
எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று அவருக்கு நன்கு தெரியும். டெஸ்ட் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய போது நாங்கள் அவரைப் பார்த்தோம். அவர் தொடர்ந்து விளையாடுவார் என்று நம்புகிறேன். அவருக்கு கீழ் விளையாடுவது மிகவும் பாக்கியம். அவருடன் விளையாட வேண்டும் என்பது கனவு. அவரும் நல்ல தொடர்பில் இருக்கிறார். இந்த ஆண்டு ஐபிஎல்லில் அவர் பேட்டிங் செய்யும்போது அதை பார்க்கலாம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தேசியக் கொடியில் ஆட்டோகிராஃப் போட்ட பாகிஸ்தான் முன்னாள் வீரர்; சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ!