லெஜண்ட்ஸ் லீக்: 47 வயதிலும் பேட்டிங்கில் அடி வெளுத்து வாங்கி அரைசதம் அடித்த ஜாக் காலிஸ்

By karthikeyan VFirst Published Mar 20, 2023, 10:08 PM IST
Highlights

லெஜண்ட்ஸ் லீக் ஃபைனலில் ஆசியா லயன்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய உலக ஜெயிண்ட்ஸ் அணி, ஜாக் காலிஸின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 147 ரன்கள் அடித்து, 148 ரன்கள் என்ற இலக்கை ஆசியா லயன்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 

ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொண்டு விளையாடும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டது. இந்தியா மகாராஜாஸ், ஆசியா லயன்ஸ் மற்றும் உலக ஜெயிண்ட்ஸ் அணிகள் கலந்துகொண்டு ஆடிய தொடரின் ஃபைனல் இன்று நடந்துவருகிறது.

இந்தியா மகாராஜாஸ் தொடரை விட்டு வெளியேறியது. ஃபைனலில் ஆசியா லயன்ஸ் மற்றும் உலக ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. தோஹாவில் நடந்துவரும் ஃபைனலில் டாஸ் வென்ற உலக ஜெயிண்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

யார் பேச்சையும் கேட்காத.. 160 கிமீ வேகத்தில் வீசி மிரட்டு..! உம்ரான் மாலிக்கை உசுப்பேற்றும் இஷாந்த் சர்மா

உலக ஜெயிண்ட்ஸ் அணி: 

மோர்னே வான் விக் (விக்கெட் கீப்பர்), ஷேன் வாட்சன் (கேப்டன்), லெண்டல் சிம்மன்ஸ், ரோஸ் டெய்லர், ஜாக் காலிஸ், பால் காலிங்வுட், சமித் படேல், மாண்டி பனேசர், டினோ பெஸ்ட், கிறிஸ் போஃபு, பிரெட் லீ.

ஆசியா லயன்ஸ் அணி:

உபுல் தரங்கா (விக்கெட் கீப்பர்), திலகரத்னே தில்ஷான், முகமது ஹஃபீஸ், மிஸ்பா உல் ஹக், அஸ்கார் ஆஃப்கான், திசாரா பெரேரா, ஷாஹித் அஃப்ரிடி (கேப்டன்), அப்துல் ரசாக், பராஸ் கட்கா, சொஹைல் தன்விர், அப்துர் ரசாக், இசுரு உடானா.

முதலில் பேட்டிங் ஆடிய உலக ஜெயிண்ட்ஸ் அணியின் டாப் 3 வீரர்களான வான் விக்(0), சிம்மன்ஸ்(17), ஷேன் வாட்சன் (0) ஆகிய மூவரும் ஏமாற்றமளித்தனர். 4ம் வரிசையில் இறங்கிய ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 4வது விக்கெட்டுக்கு அவருடன் இணைந்து நிதானமாக பேட்டிங் ஆடிய ரோஸ் டெய்லர் 33 பந்தில் 32 ரன்கள் அடித்து பங்களிப்பு செய்தார்.

அந்த பையன் செம டேலண்ட்.. உலக கோப்பையில் கண்டிப்பா ஆடவைக்கணும்..! இந்திய இளம் வீரருக்கு பிரெட் லீ ஆதரவுக்குரல்

கிரிக்கெட் ஆடிய காலத்தில் தலைசிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்து பேட்டிங், பவுலிங் என அனைத்து வகையிலும் சிறப்பாக ஆடி தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டுக்கு அபாரமான பங்களிப்பு செய்தவர் ஜாக் காலிஸ். 47 வயதிலும் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த காலிஸ், 54 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 78 ரன்களை குவித்தார். ஜாக் காலிஸின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 147 ரன்கள் அடித்த உலக ஜெயிண்ட்ஸ் அணி, 148 ரன்கள் என்ற இலக்கை ஆசியா லயன்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!