WPL 2023: சொற்ப ரன்களுக்கு பொட்டளமான மும்பை இந்தியன்ஸ்..! எளிய இலக்கை விரட்டும் டெல்லி கேபிடள்ஸ்

By karthikeyan VFirst Published Mar 20, 2023, 9:21 PM IST
Highlights

மகளிர் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸை வெறும் 109 ரன்களுக்கு சுருட்டிய டெல்லி கேபிடள்ஸ் அணி, 110 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டுகிறது.
 

மகளிர் பிரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. புள்ளி பட்டியலில் டாப் 3 இடங்களில் உள்ள மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடள்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் ஆகிய 3 அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. ஆர்சிபி மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் தொடரைவிட்டு வெளியேறிவிட்டன.

புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடள்ஸ் அணிகள் இன்றைய போட்டியில் ஆடிவருகின்றன. மும்பை டி.ஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணிகள் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய பேட்ஸ்மேன்களின் உண்மையான பிரச்னையை ஒப்புக்கொள்ள மறுக்கும் ரோஹித் சர்மா..!

டெல்லி கேபிடள்ஸ் அணி:

மெக் லானிங் (கேப்டன்), ஷஃபாலி வெர்மா, அலைஸ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மேரிஸன் கேப், டானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஜெஸ் ஜோனாசென், ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, ஷிகா பாண்டே, பூனம் யாதவ்.

மும்பை இந்தியன்ஸ் அணி: 

ஹைலி மேத்யூஸ், யஸ்டிகா பாட்டியா, நாட் ஸ்கிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), அமெலியா கெர், இசி வாங், பூஜா வஸ்ட்ராகர், அமன்ஜோத் கௌர், ஹுமைரா காஸி, ஜிந்தாமனி கலிடா, சாய்கா இஷாக்.

முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் டாப் 3 வீராங்கனைகளான யஸ்டிகா பாட்டியா(1), ஹைலி மேத்யூஸ்(5), நாட் ஸ்கிவர் பிரண்ட் (0) ஆகிய மூவரும் ஏமாற்றமளித்தனர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 23 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் பூஜா வஸ்ட்ராகர் 26 ரன்களும், இசி வாங் 23 ரன்களும், அமன்ஜோத் கௌர் 19 ரன்களும் அடித்தனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த வீராங்கனையும் பெரிய இன்னிங்ஸ் ஆடாததால் 20 ஓவரில் வெறும் 109 ரன்கள் மட்டுமே அடித்தது.

யார் பேச்சையும் கேட்காத.. 160 கிமீ வேகத்தில் வீசி மிரட்டு..! உம்ரான் மாலிக்கை உசுப்பேற்றும் இஷாந்த் சர்மா

டெல்லி கேபிடள்ஸ் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய மேரிஸன் கேப், ஷிகா பாண்டே, ஜெஸ் ஜோனாசென் ஆகிய மூவரும் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
 

click me!