India Playing XI: சூர்யகுமார் யாதவ் மீது நம்பிக்கை வைத்து கடைசி வாய்ப்பு: அதே அணியோடு களமிறங்கும் இந்தியா!

Published : Mar 20, 2023, 07:31 PM IST
India Playing XI: சூர்யகுமார் யாதவ் மீது நம்பிக்கை வைத்து கடைசி வாய்ப்பு: அதே அணியோடு களமிறங்கும் இந்தியா!

சுருக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் அதே அணியோடு களமிறங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.  

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில், முதல் போட்டியில் இந்திய 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் 2ஆவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் நடந்தது. இதில், முதலில் ஆடிய இந்தியா 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து குறைந்தபட்ச ரன்கள் எடுத்து மோசமான சாதனை படைத்தது.

அனைவரது ஆசைகளும், விருப்பங்களும் நிறைவேற வேண்டும் - உமேஷ் யாதவ் உஜ்ஜையினில் சாமி தரிசனம்!

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணியில் ஓபனிங் இருவருமே அந்த ரன்னை அடித்துக் கொடுக்க, ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. டிராவிஸ் ஹெட் 51 ரன்னும், மிட்செல் மார்ஷ் 66 ரன்னும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்று சமன் செய்தனர். இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி வரும் 22 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. இதில், இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் அதே அணியோடு களமிறங்குகிறது.

ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய வீரர்கள் யார் யார்? எந்தெந்த அணிக்கு சிக்கல் தெரியுமா?

இந்தியாவில் பேட்டிங் ஆர்டரைப் பொறுத்தவரையில் சூர்யகுமார் யாதவ் தான் இதுவரையில் தனது ரன் கணக்கை தொடங்கவில்லை. இரண்டு போட்டிகளிலும் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். 2ஆவது போட்டியில் சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா ஒரு ரன்னில் வெளியேறினார். இப்படி ஒவ்வொரு வீரரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த நிலையில், சென்னை போட்டியில் ரன்கள் குவிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. முதல் போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறப்பான ஃபார்மில் இருக்கின்றனர். விராட் கோலியும் 2ஆவது போட்டியில் ஓரளவுக்கு ரன்கள் சேர்த்தார். அக்‌ஷர் படேல் தன் பங்கிற்கு நிலைத்து நின்று ரன்கள் சேர்த்தார்.

சூர்யகுமார் யாதவ் இதுக்கு சரிப்பட மாட்டார், எதுக்கு தான் சரிப்படுவார்? பலே ஐடியா கொடுத்த தினேஷ் கார்த்திக்!

மும்பை மற்றும் விசாகப்பட்டினம் இரண்டு மைதாங்களிலும் இரு அணிகளுமே குறைவான ரன்களை எடுத்த நிலையில், சென்னையில் நடக்கும் போட்டியில் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பிருக்கிறது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால இந்தியா தொடரை கைப்பற்றும், ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால், ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றும். டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலியா இந்த வெற்றியின் மூலமாக இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும். அதே போன்று கடந்த போட்டியில் அடைந்த மோசமான தோல்விக்கு இந்தப் போட்டியில் இந்தியா கண்டிப்பாக பதிலடி கொடுக்க வேண்டும். 

மளமளவென்று சரிந்த விக்கெட் - இன்னிங்ஸ் வெற்றி பெற்று இலங்கையை ஒயிட்வாஷ் செய்த நியூசிலாந்து!

இந்தியா: பிளேயிங் 11

ஓபனிங் - ரோகித் சர்மா - சுப்மன் கில்
3. விராட் கோலி
4. சூர்யகுமார் யாதவ்
5. கேஎல் ராகுல்
6. ஹர்திக் பாண்டியா
7. ரவீந்திர ஜடேஜா
8. அக்‌ஷர் படேல்
9. குல்தீப் யாதவ்
10. முகமது சிராஜ்
11. முகமது ஷமி

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!