ODI கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்து முஷ்ஃபிகுர் ரஹிம் சாதனை! அயர்லாந்துக்கு கடின இலக்கை நிர்ணயித்தது வங்கதேசம்

By karthikeyan VFirst Published Mar 20, 2023, 5:58 PM IST
Highlights

அயர்லாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் முஷ்ஃபிகுர் ரஹிமின் சாதனை சதத்தால் 50 ஓவரில் 349 ரன்களை குவித்த வங்கதேச அணி, 350 ரன்கள் என்ற கடினமான இலக்கை அயர்லாந்துக்கு நிர்ணயித்தது.
 

அயர்லாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலில் ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் 183 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2வது ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

வங்கதேச அணி:

தமிம் இக்பால் (கேப்டன்), லிட்டன் தாஸ், நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, முஷ்ஃபிகுர் ரஹிம் (விக்கெட் கீப்பர்), ஷகிப் அல் ஹசன், டௌஹிட் ரிடாய், யாசிர் அலி, டஸ்கின் அகமது, எபடாட் ஹுசைன், நசும் அகமது, ஹசன் மஹ்மூத்.

இந்திய பேட்ஸ்மேன்களின் உண்மையான பிரச்னையை ஒப்புக்கொள்ள மறுக்கும் ரோஹித் சர்மா..!

அயர்லாந்து அணி:

ஸ்டீஃபன் டொஹனி, பால் ஸ்டர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி (கேப்டன்), ஹாரி டெக்டார், லார்கன் டக்கெர் (விக்கெட் கீப்பர்), கர்டிஸ் காம்ஃபெர், ஜார்ஜ் டாக்ரெல், ஆண்டி மெக்பிரைன், மார்க் அடைர், மேத்யூ ஹம்ஃப்ரேஸ், கிரஹாம் ஹும்.

முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான தமிம் இக்பால் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான லிட்டன் தாஸ் சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து 70 ரன்களை குவித்தார். 3ம் வரிசையில் இறங்கி, 2வது விக்கெட்டுக்கு லிட்டன் தாஸுடன் ஜோடி சேர்ந்த நஜ்முல் ஹுசைன் ஷாண்டோவும் பொறுப்புடன் பேட்டிங் ஆடி 73 ரன்களை குவித்தார். 2வது விக்கெட்டுக்கு லிட்டன் தாஸ் - ஷாண்டோ இணைந்து 101 ரன்களை குவித்தனர்.

சீனியர் வீரரான ஷகிப் அல் ஹசன் 17 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார். ஆனால் மற்றொரு சீனியர் வீரரான முஷ்ஃபிகுர் ரஹிம் அதிரடியாக பேட்டிங் ஆடி டெத் ஓவர்களில் காட்டடி அடித்து 60 பந்தில் சதமடித்தார். 60 பந்தில் 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 100 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று இன்னிங்ஸை முடித்து கொடுத்தார். அவரது அதிரடியான சதத்தால் 50 ஓவரில் 349 ரன்களை குவித்த வங்கதேச அணி, 350 ரன்கள் என்ற கடினமான இலக்கை அயர்லாந்துக்கு நிர்ணயித்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜா அபார சாதனை..! சச்சின், கபில் தேவுடன் இணைந்தார் ஜடேஜா

இந்த போட்டியில் 60 பந்தில் முஷ்ஃபிகுர் ரஹிம் சதமடித்தார். இதன்மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த வங்கதேச வீரர் என்ற சாதனையை முஷ்ஃபிகுர் ரஹிம் படைத்துள்ளார். 
 

click me!