WPL 2023:ஹேமலதா, ஆஷ்லே கார்ட்னெர் அதிரடி அரைசதம்! யுபி வாரியர்ஸுக்கு கடின இலக்கை நிர்ணயித்த குஜராத் ஜெயிண்ட்ஸ்

Published : Mar 20, 2023, 05:23 PM IST
WPL 2023:ஹேமலதா, ஆஷ்லே கார்ட்னெர் அதிரடி அரைசதம்! யுபி வாரியர்ஸுக்கு கடின இலக்கை நிர்ணயித்த குஜராத் ஜெயிண்ட்ஸ்

சுருக்கம்

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் யுபி வாரியர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி, தயாளன் ஹேமலதா மற்றும் ஆஷ்லே கார்ட்னெர் ஆகிய இருவரது அரைசதத்தால் 20 ஓவரில் 178 ரன்களை குவித்து 179 ரன்கள் என்ற கடின இலக்கை யுபி வாரியர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.  

மகளிர் பிரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. 3ம் இடத்தில் இருக்கும் யுபி வாரியர்ஸ் மற்றும் கடைசி இடத்தில் இருக்கும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் இன்றைய போட்டியில் ஆடிவருகின்றன.

ஆர்சிபி அணியும் தொடர் தோல்விகளிலிருந்து மீண்டு வெற்றி பாதையில் பயணிப்பதால் வெற்றி கட்டாயத்துடன் யுபி வாரியர்ஸை எதிர்கொண்டு ஆடிவரும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. 

இந்திய பேட்ஸ்மேன்களின் உண்மையான பிரச்னையை ஒப்புக்கொள்ள மறுக்கும் ரோஹித் சர்மா..!

குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி: 

சோஃபியா டன்க்லி, லாரா வோல்வார்ட், ஆஷ்லே கார்ட்னெர், தயாளன் ஹேமலதா, ஹர்லீன் தியோல், சுஷ்மா வெர்மா, ஸ்னே ராணா (கேப்டன்), கிம் கார்த், மோனிகா படேல், டனுஜா கன்வார், அஷ்வனி குமாரி.  

யுபி வாரியர்ஸ் அணி: 

தேவிகா வைத்யா, அலைஸா ஹீலி (கேப்டன்), கிரன் நவ்கிரே, டாலியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், தீப்தி ஷர்மா, சோஃபி எக்லிஸ்டோன், சிம்ரன் ஷேக், பார்ஷவி சோப்ரா, அஞ்சலி சர்வானி, ராஜேஷ்வரி கெய்க்வாட். 
 
முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகள் சோஃபியா டன்க்லி(23) மற்றும் லாரா வோல்வார்ட்(17) அதிரடியாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஹர்லீன் தியோல் 7 பந்தில் 4 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜா அபார சாதனை..! சச்சின், கபில் தேவுடன் இணைந்தார் ஜடேஜா

அதன்பின்னர் களமிறங்கிய தயாளன் ஹேமலதா மற்றும் ஆஷ்லே கார்ட்னெர் ஆகிய இருவரும் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தனர். ஹேமலதா 33 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 57 ரன்கள் அடிக்க, ஆஷ்லே கார்ட்னெர் 39 பந்தில் 60 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 178 ரன்களை குவித்த குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி, 179 ரன்கள் என்ற கடின இலக்கை யுபி வாரியர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

IND vs USA T20 World Cup: டாஸ் வென்ற மோனங்க் படேல் - பும்ரா இல்லாமல் இந்தியா; வான்கடேயில் சாதனை படைக்குமா SKY And Team?
T20 World Cupல் 300 ரன்கள்; ருத்ரதாண்டவம் ஆடுமா இந்தியா? புதிய வரலாறு படைக்க 5 காரணங்கள்!