அனைவரது ஆசைகளும், விருப்பங்களும் நிறைவேற வேண்டும் - உமேஷ் யாதவ் உஜ்ஜையினில் சாமி தரிசனம்!

By Rsiva kumarFirst Published Mar 20, 2023, 5:53 PM IST
Highlights

இந்திய கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ மகாகாலேஸ்வரர் கோயிலில், அனைவரது ஆசைகளும், விருப்பங்களும் நிறைவேற வேண்டும் என்பதற்காக சாமி தரிசனம் செய்துள்ளார்.
 

கடந்த 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பிறந்த உமேஷ் யாதவ், கடந்த 2010 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுகமானார். 2011 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் அறிமுகமானார். இதே போன்று 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் டி20 போட்டியில் அறிமுகமனார். இப்படி அனைத்து போட்டிகளிலும் உமேஷ் யாதவ் அறிமுகமாகி விளையாடி வருகிறார்.

ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய வீரர்கள் யார் யார்? எந்தெந்த அணிக்கு சிக்கல் தெரியுமா?

சமீபத்தில் கூட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் தொடரில் விளையாடினார். இதில் முதல் இன்னிங்ஸில் அடுத்தடுத்த பந்துகளில் சிக்சர் விரட்டி எதிரணியை மிரள வைத்தார். அதுமட்டுமின்றி பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினார். எனினும், இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 4ஆவது ஒரு நாள் போட்டியிலும் விளையாடினார். இதில், ரன் அவுட் செய்யப்பட்டார். பந்து வீச்சிலும் விக்கெட் எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து நடக்கும் ஒரு நாள் தொடரில் அவர் இடம் பெறவில்லை.

சூர்யகுமார் யாதவ் இதுக்கு சரிப்பட மாட்டார், எதுக்கு தான் சரிப்படுவார்? பலே ஐடியா கொடுத்த தினேஷ் கார்த்திக்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தலா ஒரு ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று 1-1 என்று சமநிலையில் உள்ளன. இந்த நிலையில், வெற்றியை தீர்மானிக்கும் கடைசி ஒரு நாள் போட்டி வரும் 22 ஆம் தேதி சென்னையில் நடக்க இருக்கிறது. இந்தப் போட்டி மழையால பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு என்று கூறப்படுகிறது. சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் இன்றும், நாளையும் கன மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உமேஷ் யாதவின் தந்தை காலமானார். இதயடுத்து, மார்ச் 8 ஆம் தேதி உமேஷ் யாதவ் மற்றும் தன்யா வத்வா தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜையினில் உள்ள மகா காலேஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

மளமளவென்று சரிந்த விக்கெட் - இன்னிங்ஸ் வெற்றி பெற்று இலங்கையை ஒயிட்வாஷ் செய்த நியூசிலாந்து!

அதுமட்டுமின்றி அதிகாலையில் பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளாக செய்யப்படும் பிரபலமான சடங்கான சாம்பல் பிரசாதம் சடங்கு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டுள்ளார். இதற்கு பஸ்ம ஆரத்தி என்று பெயர். பஸ்ம என்பது சாம்பலைக் குறிக்கிறது. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: அனைவரின் விருப்பங்களும் ஆசைகளும் நிறைவேற வேண்டும் என்று பிரார்த்தித்தேன். உலகில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும் என்று கூறியுள்ளார். 

இதற்கு முன்னதாக கேஎல் ராகுல் தனது மனைவி அதியா ஷெட்டியுடனும், விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடனும் சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் ஆகியோரும் மகா காலேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

இந்திய தேசியக் கொடியில் ஆட்டோகிராஃப் போட்ட பாகிஸ்தான் முன்னாள் வீரர்; சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ!

click me!