ஆபத்தான கட்டத்தில் இந்தியா: உலக நம்பர் 1 அணிக்கான ரேஸில் ஆஸ்திரேலியா!

By Rsiva kumarFirst Published Mar 21, 2023, 11:02 AM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா தோற்றால் ஐசிசி ஆண்கள் ODI அணிகள் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா நம்பர் 1 இடம் பிடிக்கும்.
 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில், முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியாவும், 2ஆவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்று சமனில் உள்ளன. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் 3ஆவது ஒரு நாள் போட்டி நாளை சென்னையில் நடக்கிறது. தற்போது ஆபத்தான கட்டத்தில் இருக்கும் இந்தியா நாளை நடக்க உள்ள போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.

ஐபில் தொடரிலிருந்து தோனி ஒய்வு பெறுவது எப்போது? தீபக் சாஹர் வெளியிட்ட உண்மை!

தற்போது ஐசிசி ஆண்கள் ODI அணிகள் தரவரிசை பட்டியலில் இந்தியா 114 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. 112 ரேட்டிங் பெற்று 2ஆவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா விசாகப்பட்டினத்தில் நடந்த 2ஆவது ஒரு நாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 113 புள்ளிகள் பெற்றது. இந்த நிலையில், தான் நாளை நடக்க உள்ள போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் 115 புள்ளிகளுடன் தொடரையும் 2-1 என்று கைப்பற்றும். அப்படியில்லை, என்றால், ஆஸ்திரேலியா தான் முதலிடம் பிடிக்கும். அதுமட்டுமின்றி தொடரையும் 1-2 என்று ஆஸ்திரேலியா கைப்பற்றி டெஸ்ட் தோல்விக்கு தக்க பதிலடி கொடுக்கும்.

ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய வீரர்கள் யார் யார்? எந்தெந்த அணிக்கு சிக்கல் தெரியுமா?

ஆஸ்திரேலியா எப்படி நம்பர் 1 அணியாக வரும்?

தற்போது இந்தியா நம்பர் 1 அணியாக இருக்கிறது.

நாளைய போட்டியில் தோற்றால் இந்தியா நம்பர் 1 இடத்தை ஆஸ்திரேலியாவிற்கு தாரை வார்க்கும்.

ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் தொடரை 2-1 என்று கைப்பற்றும்.

இந்தியா ஜெயித்தால் 115 புள்ளிகளுடன் நம்பர் 1 இடத்திலேயே நீடிக்கும். தொடரையும், 2-1 என்று கைப்பற்றும்.

சூர்யகுமார் யாதவ் இதுக்கு சரிப்பட மாட்டார், எதுக்கு தான் சரிப்படுவார்? பலே ஐடியா கொடுத்த தினேஷ் கார்த்திக்!

பவுலிங் மற்றும் பேட்டிங் இரண்டிலும் பலம் வாய்ந்த அணியாக தற்போது ஆஸ்திரேலியா திகழ்கிறது. நடந்த முடிந்த 2ஆவது ஒரு நாள் போட்டியில் இந்தியாவை 117 ரன்களுக்கு சுருட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொண்ட இந்தியா, நாளை நடக்க உள்ள 3ஆவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு தகுந்த பாடம் புகட்ட கடுமையாக போராடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியிலும் சூர்யகுமார் யாதவ்விற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன் நடந்த 2 போட்டியிலும் கோல்டன் டக் முறையில் ஒரே மாதிரியாக ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய தேசியக் கொடியில் ஆட்டோகிராஃப் போட்ட பாகிஸ்தான் முன்னாள் வீரர்; சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ!

click me!