கிரிக்கெட் வீரராக வர வேண்டும் என்று கனவு காணும் இளைஞர்கள் பொருளாதார பிரச்சனையை சந்திக்க கூடாது என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ரிங்கு சிங் கூறியுள்ளார்.
ஐபிஎல் 2023ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியவர் ரிங்கு சிங். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இவர், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் மட்டும் 5 சிக்ஸர்கள் அடித்து கடைசியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஜெயிக்க வைத்து ஒரே போட்டியில் ஹீரோவானார். மேலும், ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ரிங்கு சிங்கிற்கு தற்போது ஆசிய விளையாட்டு போட்டியில் இடம் கிடைத்துள்ளது.
8 ஆண்டுகளாக ஆர்சிபியில் இருந்தேன்; ஒரு போன் கால் கூட இல்லை: யுஸ்வேந்திர சாஹல்!
இதனால், உற்சாகத்தில் மிதக்கும் ரிங்கு சிங் தனது கிரிக்கெட் பயணம் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: கிரிக்கெட் வீளையாடும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் இந்திய அணியில் இடம் பிடித்துவிட வேண்டும் என்பது தான். ஆனால், எல்லோருக்கும் அந்த வாய்ப்பு எளிதில் கிடைத்து விடாது.
ரூ.100 கோடி மதிப்புள்ள மிக விலை உயர்ந்த பேட் ஸ்பான்சர்ஷிப் கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
எதிர்காலம் பற்றி யோசிப்பது கூட கிடையாது. அப்படி யோசித்தால் அதனுடைய அழுத்தமும் கூடவே சேர்ந்து வரும். இந்திய அணிக்கு நான் தேர்வு செய்யப்பட்டது, என்னைவிட எனது குடும்பத்தினருக்கு அதிகளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் என்னை இந்திய அணியின் ஜெர்சியில் பார்த்தால் மகிழ்ச்சியடைவார்கள். இதற்கு முக்கிய காரணம் எனது வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை அப்படி. எனது கஷ்டத்தில் ஒவ்வொருவரும் உதவி செய்திருக்கிறார்கள்.
அயர்லாந்து தொடருக்கு டிராவிட் உள்ளிட்ட பயிற்சியாளருக்கு ஓய்வு; களமிறங்கும் விவிஎஸ் லட்சுமணன்!
ஐபிஎல் தொடர் மறக்க முடியாத அனுபவத்தை எனக்கு பெற்றுக் கொடுத்தது. உத்தரப்பிரதேச மாநில அணிக்காக 4 அல்லது 5ஆவதாக களமிறங்கி விளையாடியிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் இளம் கிரிக்கெட் வீரராக வர வேண்டும் என்று கனவு உள்ள இளைஞர்கள் யாரும் பொருளாதார பிரச்சனையை சந்திக்க கூடாது. ஆதலால், அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை மேற்கொண்டு வருகிறேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.