எம்ஆர்எஃப் நிறுவனத்தின் பேட் ஸ்பான்சர்ஷிப் மூலமாக விராட் கோலி ரூ.100 கோடி வரையில் வருமானம் ஈட்டி வருகிறார்.
விலை உயர்ந்த பேட் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் மிக முக்கியமான நிறுவனமாக எம்.ஆர்.எஃப் நிறுவனம் திகழ்கிறது. இந்நிறுவனத்தின் மூலமாக தயாரிக்கப்படும் எம்.ஆர்.எஃப் பேட்டை சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ஷிகர் தவான், சஞ்சு சாம்சன், பிரித்வி ஷா, ஏபிடிவிலியர்ஸ், பிரையன் லாரா, ஸ்டீவ் வாக் ஆகியோர் பயன்படுத்தியுள்ளனர்.
அயர்லாந்து தொடருக்கு டிராவிட் உள்ளிட்ட பயிற்சியாளருக்கு ஓய்வு; களமிறங்கும் விவிஎஸ் லட்சுமணன்!
இந்நிறுவனத்தின் விளம்பரங்களை இந்தியாவைச் சேர்ந்த பணக்கார கிரிக்கெட்டர்களான சச்சின், தோனி ஆகியோர் இதற்கு முன்னதாக பெற்றிருக்கிறார்கள். ரூ. 100 கோடி MRF ஒப்பந்தத்தின் விலையுடன், கிரிக்கெட் துறையில் எல்லா காலத்திலும் மிகவும் விலையுயர்ந்த பேட் ஸ்பான்சர்ஷிப்பைக் கொண்ட இந்திய கிரிக்கெட் வீரராக விராட் கோலி திகழ்கிறார். இந்நிறுவனத்தின் ஒப்பந்தத்தின் மூலமாக விராட் கோலி 8 வருடத்திற்கு ரூ100 கோடி பெறுகிறார். மாதந்தோறும் ரூ. 12.5 கோடி வீதம் வழங்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் எம்.ஆர்.எஃப் நிறுவனத்தின் பேட் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை பெற்றிருந்தார். அதன் மூலமாக அவருக்கு ரூ.8 கோடி வீதம் வருமானம் கிடைத்தது. MRF உடன் பேட் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், விராட் கோலி வரும் ஆண்டுகளில் தனது பேட் மீது MRF லோகோவைப் பயன்படுத்த ஒப்புக்கொண்டார். கோலியின் பேட் சுமார் ரூ.27,000 மதிப்புடையது என்றாலும், அவரது பேட்டில் உள்ள MRF ஸ்டிக்கர் அவருக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.12 கோடிக்கு மேல் பெற்று கொடுக்கிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு MRF நிறுவனத்துடன் ரூ.100 கோடி ஒப்பந்தத்தில் 8 ஆண்டுகளுக்கு விராட் கோலி கையெழுத்திட்டதாக சொல்லப்படுகிறது. அதன்படி வரும் 2025 ஆம் ஆண்டு வரையில் இந்த ஒப்பந்தம் இருக்கிறது. ஒப்பந்தம் மூலமாக எம்.ஆர்.எஃப் நிறுவனத்திடமிருந்து ரூ.1 கோடி வீதம் சம்பளமாக விராட் கோலிக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாற்று சாதனை படைத்த மார்க்கெட்டா வோண்ட்ரூசோவா: முதல் முறையாக விம்பிள்டன் சாம்பியன்!