அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தொடரைத் தொடர்ந்து இந்தியா ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடுகிறது.
ஜோகோவிச் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி: வரலாற்று சாதனை படைத்த ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ்!
இந்த ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக, டீம் இந்தியா, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான அட்டவணையும் வெளியானது. அதன்படி வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையில் டி20 தொடர் நடக்கிறது.
இந்தியா மற்றும் அயர்லாந்து டி20 தொடர்:
ஆகஸ்ட் 18 – இந்தியா – அயர்லாந்து – முதல் டி20 (மலாஹிட், பிற்பகல் 3 மணி)
ஆகஸ்ட் 20 - இந்தியா – அயர்லாந்து – 2ஆவது டி20 (மலாஹிட், பிற்பகல் 3 மணி)
ஆகஸ்ட் 23 - இந்தியா – அயர்லாந்து – முதல் டி20 (மலாஹிட், பிற்பகல் 3 மணி)
இதன் மூலமாக 2ஆவது முறையாக இந்தியா, அயர்லாந்திற்கு சுற்றுப்பயணம் செய்கிறது. இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் என்று அணியுடன் பிஸியாக இருக்கும் ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது. அடுத்து ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் காரணமாக அயர்லாந்து தொடருக்கு ராகுல் டிராவிட் உள்ளிட்ட பயிற்சியாளர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட உள்ளது. மாறாக, விவிஎஸ் லட்சுமணன் தலைமை பயிற்சியாளராக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரலாற்று சாதனை படைத்த மார்க்கெட்டா வோண்ட்ரூசோவா: முதல் முறையாக விம்பிள்டன் சாம்பியன்!