பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்ததன் மூலமாக 15 ஆண்டுகால சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.
உத்திரபிரதேச மாநிலத்தில் பிறந்து வளர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது 18ஆவது வயதில் முதல் முறையாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று ஐபிஎல் தொடரில் விளையாடினார். இதில், அவர் 3 போட்டிகளில் 40 ரன்கள் எடுத்தார். இதையடுத்து தனது 19ஆவது வயதில் 10 போட்டிகளில் விளையாடிய அவர் 249 ரன்கள் குவித்தார். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு 10 போட்டிகளில் விளையாடி 258 ரன்கள் குவித்தார்.
கொல்கத்தாவில் கனமழை: போட்டி ரத்து செய்யப்பட்டால் பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு?
இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால் 625 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 5 அரைசதம் அடங்கும். அதிகபட்சமாக 124 ரன்கள் குவித்துள்ளார். இந்த சீசனில் மட்டும் அவர் 87 பவுண்டரி மற்றும் 26 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதன் மூலமாக ஐபிஎல் தொடரில் 15 ஆண்டுகாலம் நீடித்த ஒரு சாதனையை ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார்.
கேகேஆருக்கு கடைசி வாய்ப்பு: லக்னோவை 103 ரன்களில் ஜெயித்தால் பிளே ஆஃப் வாய்ப்பு!
இதன் மூலம் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்து, சர்வதேச போட்டிகளில் விளையாடாத ஒரு வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2008 ஆம் ஆண்டு ஷான் மார்ஷ் இந்த சாதனையை படைத்திருந்தார். தற்போது இந்த சாதனையை 21 வயதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார்.
9ஆவது முறையாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறிய பஞ்சாப்!