சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பத்திரனாவை இந்திய அணியில் விளையாட வைப்பதற்காக இளம் பெண் ஒருவர் அவரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனா (பதிரனா). இதுவரையில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள பத்திரனா 42.2 ஓவர்கள் வீசி 327 ரன்கள் விட்டுக் கொடுத்து, 17 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதில், அதிகபட்சமாக 3/15 விக்கெட் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்திரனா பற்றி தோனி என்ன சொன்னார்? பெருமிதமாக பகிர்ந்த பத்திரனா சகோதரி!
undefined
இந்த சீசனில் ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்ட பத்திரனாவிற்கு தோனியின் ஆதரவு இருக்கும் வரையில் அவர் சென்னை அணியில் முக்கிய பங்கு வகிக்கும் வீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடந்த முதல் குவாலிஃபையர் போட்டியில் பத்திரனா 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகள் கைப்பற்றி 28 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.
யுவராஜ் சிங்கின் மொத்த சொத்து மதிப்பு மட்டும் ரூ.320 கோடியா?
ஒரு கட்டத்தில் 12ஆவது ஓவரை வீசிவிட்டு ஓய்வு எடுத்துவிட்டு பின்னர் 16ஆவது ஓவர் வீச வந்த அவருக்கு நடுவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து, தோனி நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தார். அதன் பிறகு 5 நிமிடங்களுக்குப் பிறகு பந்து வீச அனுமதிக்கப்பட்டார். இந்தப் போட்டியில் சிஎஸ்கே 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றது.
உலக பணக்கார கிரிக்கெட் வீரர்: சாக்ஷி, தோனியின் சொத்து மதிப்பு ரூ.1071 கோடி!
வரும் 28 ஆம் தேதி நாளை மறுநாள் அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. சென்னைக்கு எதிராக களமிறங்கும் அணிக்கான 2ஆவது குவாலிஃபையர் போட்டி இன்று நடக்கிறது. இதில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஜடேஜாவை சமாதானப்படுத்திய சிஎஸ்கே சிஇஓ: வைரலாகும் வீடியோ!
இந்த நிலையில், நேற்று பத்திரனாவின் குடும்பத்தினர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பத்திரனாவின் சகோதரி, விஷூகா பத்திரனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மதீஷாவைப் பற்றி நீங்கள் யாரும் கவலைப்பட தேவையில்லை. அவன் எப்போதும் என்னுடன் இருக்கிறான் என்று தோனி கூறியதாக விஷூகா குறிப்பிட்டு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
24 ஆண்டுகளுக்குப் பிறகு அனில் கும்ப்ளே சாதனையை சமன் செய்து புதிய சாதனை படைத்த ஆகாஷ் மத்வால்!
இந்த நிலையில் பத்திரனாவை இந்திய அணியில் விளையாட வைக்க இளம்பெண் ஒரு பிளான் ஒன்றை கூறியுள்ளார். ரோஹினி ஸ்ரீ தரன் என்ற அந்தப் பெண் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: பத்திரனாவை என்னை மாதிரி ஒரு இந்திய பெண் திருமணம் செய்து கொண்டால், அவர் இந்தியாவுக்கு குடிபெயர்ந்துட்டா, அவருக்கு இந்திய குடியுரிமை வாங்கிட்டா, அவர் இந்திய அணியில் விளையாடலாம்ல என்று கூறியுள்ளார்.