ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலிய அணியின் உத்தேச ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-2021 ஃபைனலில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி கோப்பையை வென்றது. முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் டைட்டிலை வென்று சாதனை படைத்தது நியூசிலாந்து அணி.
கடந்த முறை ஃபைனலுக்கு முன்னேறி கோப்பையை இழந்த இந்திய அணி இந்த முறையும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறியது. 2021-2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.
IPL 2023: பெரிய மேட்ச்சை ஜெயிக்கும் வித்தை அறிந்தவர் தோனி..! கங்குலி புகழாரம்
வரும் ஜூன் 7ம் தேதி லண்டன் ஓவலில் ஃபைனல் தொடங்குகிறது. இந்த முறை ஃபைனலில் வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் களமிறங்குகின்றன. இந்த போட்டியில் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.
டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். லபுஷேன் மற்றும் ஸ்மித் ஆகிய இருவரும் 3 மற்றும் 4ம் இடங்களில் ஆடுவார்கள். டிராவிஸ் ஹெட் 5ம் வரிசையிலும், ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீன் 6ம் வரிசையிலும் பேட்டிங் ஆடுவார்கள். விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி. ஃபாஸ்ட் பவுலர்களாக கேப்டன் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஸ்காட் போலந்த் ஆகிய மூவரும், ஸ்பின்னராக நேதன் லயனும் ஆடுவார்கள்.
IPL 2023: 5 ரன்னுக்கு 5 விக்கெட்.. ஐபிஎல்லில் சாதனைகளை வாரிக்குவித்த ஆகாஷ் மத்வால்..!
வலுவான ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன்:
டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நேதன் லயன், ஸ்காட் போலந்த்.