IPL 2023: 5 ரன்னுக்கு 5 விக்கெட்.. ஐபிஎல்லில் சாதனைகளை வாரிக்குவித்த ஆகாஷ் மத்வால்..!

By karthikeyan V  |  First Published May 25, 2023, 6:47 PM IST

லக்னோவிற்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் 5 ரன்னுக்கு 5 விக்கெட் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் பவுலர் ஆகாஷ் மத்வால் அபாரமான சாதனைகளை வாரிக்குவித்துள்ளார்.
 


ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே, லக்னோ, மும்பை அணிகள் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றன. முதல் தகுதிப்போட்டியில் குஜராத்டைட்டன்ஸை வீழ்த்தி சிஎஸ்கே அணி நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறியது. 

எலிமினேட்டரில் லக்னோவை வீழ்த்தி மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2வது தகுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நாளை மோதுகின்றன. அந்த போட்டியில் ஜெயிக்கும் அணி ஃபைனலில் வரும் 28ம் தேதி சிஎஸ்கேவை எதிர்கொள்ளும்.

Tap to resize

Latest Videos

IPL 2023: 2வது ஃபைனலிஸ்ட் யார்..? மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

எலிமினேட்டரில் லக்னோவிற்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் 5 ரன் மட்டுமே கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு உதவியதுடன் சாதனைகளை வாரிக்குவித்தார்.  ஹர்திக் பாண்டியா, பும்ரா, சூர்யகுமார் யாதவ் மாதிரியான வீரர்களை அடையாளம் காட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி, இப்போது திலக் வர்மா, ஆகாஷ் மத்வால் ஆகிய திறமைசாலிகளை அடையாளம் காட்டியுள்ளது.

லக்னோவிற்கு எதிரான போட்டியில் 5 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைகளை குவித்தார் ஃபாஸ்ட் பவுலர் ஆகாஷ் மத்வால். 

ஆகாஷ் மத்வால் படைத்த சாதனைகள்:

1. ஐபிஎல்லில் சிறந்த எகானமி ரேட்டில் 5 விக்கெட் வீழ்த்திய பவுலர் (1.4)

2. ஐபிஎல் பிளே ஆஃபில் மிகச்சிறந்த பவுலிங் இதுதான்.

IPL 2023: ரிக்கி பாண்டிங்கின் அடத்தால் அழிந்த டெல்லி கேபிடள்ஸ்..! செம காட்டு காட்டிய கவாஸ்கர்

3. ஐபிஎல்லில் தேசிய அணிக்காக ஆடிராத பவுலரின் சிறந்த பவுலிங் பெர்ஃபாமன்ஸ் இதுதான்
 

click me!