IPL 2023: 2வது ஃபைனலிஸ்ட் யார்..? மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan V  |  First Published May 25, 2023, 4:24 PM IST

ஐபிஎல் 16வது சீசனின் 2வது தகுதிப்போட்டியில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 


ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே, லக்னோ, மும்பை அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறிய நிலையில், முதல் தகுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி சிஎஸ்கே அணி நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறிவிட்டது.

எலிமினேட்டரில் லக்னோவை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸும், முதல் தகுதிப்போட்டியில் தோல்வியடைந்த குஜராத் டைட்டன்ஸும் 2வது தகுதிப்போட்டியில் மோதுகின்றன. நாளை (மே 26) அகமதாபாத்தில் நடக்கும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் 28ம் தேதி நடக்கும் ஃபைனலில் சிஎஸ்கேவை எதிர்கொள்ளும்.

Tap to resize

Latest Videos

ஆசிய கோப்பை 2023 எங்கு நடக்கிறது..? மே 28 இறுதி முடிவு

5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸும் 2வது தகுதிப்போட்டியில் மோதுகின்றன. இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும். இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், திலக் வர்மா, கிறிஸ் ஜோர்டான், ரித்திக் ஷோகீன், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரண்டார்ஃப், ஆகாஷ் மத்வால்.

IPL 2023: ரிக்கி பாண்டிங்கின் அடத்தால் அழிந்த டெல்லி கேபிடள்ஸ்..! செம காட்டு காட்டிய கவாஸ்கர்

உத்தேச குஜராத் டைட்டன்ஸ் அணி:

ஷுப்மன் கில், ரிதிமான் சஹா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தசுன் ஷனாகா, டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், தர்ஷன் நல்கண்டே, மோஹித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி.

click me!