IPL 2023: ஜெய்ஸ்வால், பட்லர் அதிரடி அரைசதம்.. ஹெட்மயர் காட்டடி ஃபினிஷிங்..! DCக்கு கடின இலக்கை நிர்ணயித்தது RR

Published : Apr 08, 2023, 05:32 PM IST
IPL 2023: ஜெய்ஸ்வால், பட்லர் அதிரடி அரைசதம்.. ஹெட்மயர் காட்டடி ஃபினிஷிங்..! DCக்கு கடின இலக்கை நிர்ணயித்தது RR

சுருக்கம்

ஐபிஎல் 16வது சீசனில் டெல்லி கேபிடள்ஸுக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவரில் 199 ரன்களை குவித்து 200 ரன்கள் என்ற கடின இலக்கை டெல்லி கேபிடள்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.  

ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் களமிறங்கியதால் இரு அணிகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

டேவிட் வார்னர் (கேப்டன்), மனீஷ் பாண்டே, ரைலீ ரூசோ, ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்ஸர் படேல், அபிஷேக் ஷர்மா, அன்ரிக் நோர்க்யா, கலீல் அகமது, குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.

அந்த பையன் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மாதிரி.. மிகப்பெரிய மேட்ச் வின்னர்..! இந்திய அணிக்கு பாண்டிங் அட்வைஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மயர், துருவ் ஜோரெல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரெண்ட் போல்ட், சந்தீப் ஷர்மா, யுஸ்வேந்திர சாஹல்.

முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகிய இருவரும் பவுண்டரிகளாக விளாசி, அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் ஓவரிலேயே 5 பவுண்டரிகளை விளாசி அதிரடியாக தொடங்கிய ஜெய்ஸ்வால் 25 பந்தில் அரைசதம் அடித்தார். ஜெய்ஸ்வால் - பட்லரின் அதிரடியால் பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 68  ரன்களை குவித்தது.

31 பந்தில் 60 ரன்கள் அடித்து ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன்(0), ரியான் பராக்(7) ஆகிய இருவரும் சொதப்பினர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ஜோஸ் பட்லர் 51 பந்தில் 78 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். ஷிம்ரான் ஹெட்மயர் 21 பந்தில் 4 சிக்ஸர்களை விளாசி 39 ரன்கள் அடித்து இன்னிங்ஸை சிறப்பாக முடித்து கொடுக்க, 20 ஓவரில் 199 ரன்களை குவித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 200 ரன்கள் என்ற இலக்கை டெல்லி கேபிடள்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.

IPL 2023: தோற்றாலும் ஜெயித்தாலும் மீசைய முறுக்கும் மும்பை இந்தியன்ஸ்..! MI vs CSK அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

ராஜஸ்தான் ராயல்ஸ் தொடங்கிய வேகத்திற்கு இன்னும் 20 ரன்கள் கூடுதலாக அடித்திருக்கலாம்.  ஆனால் 2வது பாதி இன்னிங்ஸில் பெரியளவில் அடிக்காததால் 199 ரன்கள் மட்டுமே அடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!