ஐபிஎல் 16வது சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
ஐபிஎல் 16வது சீசனில் சனிக்கிழமையான இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன. பிற்பகல் நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேபிடள்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதற்கு முன் ஆடிய 2 போட்டிகளில் ராஜஸ்தான் அணி ஒரு வெற்றியும், ஆடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்த டெல்லி அணியும் வெற்றி வேட்கையுடன் இந்த போட்டியில் களமிறங்கியுள்ளன. கவுகாத்தியில் நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அந்த பையன் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மாதிரி.. மிகப்பெரிய மேட்ச் வின்னர்..! இந்திய அணிக்கு பாண்டிங் அட்வைஸ்
இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதால் அதிரடியான மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது டெல்லி கேபிடள்ஸ் அணி. மிட்செல் மார்ஷுக்கு பதிலாக ரோவ்மன் பவலும், சர்ஃபராஸ் கானுக்கு பதிலாக லலித் யாதவும் களமிறக்கப்பட்டுள்ளனர். தொடக்க வீரர் பிரித்வி ஷாவுக்கு பதிலாக மனீஷ் பாண்டே சேர்க்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேஎம் ஆசிஃபுக்கு பதிலாக சந்தீப் ஷர்மாவும், தேவ்தத் படிக்கல்லுக்கு பதிலாக துருவ் ஜோரெலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டெல்லி கேபிடள்ஸ் அணி:
டேவிட் வார்னர் (கேப்டன்), மனீஷ் பாண்டே, ரைலீ ரூசோ, ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்ஸர் படேல், அபிஷேக் ஷர்மா, அன்ரிக் நோர்க்யா, கலீல் அகமது, குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.
IPL 2023: ரஜத் பட்டிதார், ரீஸ் டாப்ளிக்கு மாற்று வீரர்களை அறிவித்தது ஆர்சிபி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மயர், துருவ் ஜோரெல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரெண்ட் போல்ட், சந்தீப் ஷர்மா, யுஸ்வேந்திர சாஹல்.