லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் முதல் விக்கெட்டுக்கு சட்டையெல்லாம் திறந்து போட்டு உற்சாகத்தில் துள்ளி குவித்துள்ளார்.
ஐபிஎல் 16வது சீசனின் 10ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான போட்டி லக்னோவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் மளமளவென ஆட்டமிழந்தனர். மயன்க் அகர்வால் 8 ரன்னில் க்ருணல் பாண்டியாவின் பந்தில் ஆட்டமிழந்தார். அன்மோல்ப்ரீத் சிங்கையும் (31), ஐடன் மார்க்ரமையும்(0) க்ருணல் பாண்டியா வீழ்த்தினார். நிலைத்து நின்று நிதானமாக ஆடிய ராகுல் திரிபாதியை 35 ரன்களூக்கு யஷ் தாகூர் வீழ்த்தினார்.
IPL 2023: மும்பை எங்க கோட்டை: யாராலயும் ஒன்னும் செய்ய முடியாது; அடித்து சொல்லும் ரெக்கார்டு!
அதன்பின்னர் வாஷிங்டன் சுந்தர்(16) மற்றும் அடில் ரஷீத்(4) ஆகிய இருவரையும் அமித் மிஷ்ரா வீழ்த்தினார். அப்துல் சமாத் அதிரடியாக ஆடி 10 பந்தில் 21 ரன்கள் அடித்து முடிக்க, 20 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே அடித்தது சன்ரைசர்ஸ் அணி. லக்னோ அணி சார்பில் க்ருணல் பாண்டியா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், அமித் மிஷ்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
IPL 2023: கடைசி இடத்தில் குஜராத் டைட்டன்ஸ், நம்பர் இடத்தில் டெல்லி கேபிடல்ஸ்: எதுல தெரியுமா?
பின்னர், 122 என்று எளிய இலக்கை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி துரத்தியது. அந்த அணியின் அதிரடி வீரரான கைல் மேயர்ஸ் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை பரூகி கைப்பற்றினார். லக்னோ அணியின் அதிரடி வீரர் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் உரிமையாளர் காவ்யா மாறன் சந்தோஷத்தில் சட்டையெல்லாம் திறந்த நிலையில் துள்ளிக் குதித்து கைதட்டி ஆரவாரம் செய்துள்ளார். அவரது புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆனால், இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 2ஆவது தோல்வி ஆகும். நாளை நடக்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஹைதராபாத்தில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
IPL 2023: U19 WC வின்னிங் கேப்டன் - இப்போ ஐபிஎல் SRH-ன் 9ஆவது கேப்டனாக ஐடன் மார்க்ரம் புதிய அவதாரம்
Celebration from SRH camp when Lucknow lost Mayers. pic.twitter.com/1KIEyQQ7A3
— Johns. (@CricCrazyJohns)