வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து சாதனை படைத்திருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் நேற்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.
இதில், முதல் நாளிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக அலிக் அதானாஸ் 47 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பந்து வீச்சு தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
கோலியை பார்த்து கத்துக்கிட்ட கத்துக்குட்டி: மைதானத்தில் ஜாலியான டான்ஸ் ஸ்டெப் போட்ட சுப்மன் கில்!
இதையடுத்து ஆடிய இந்திய அணியில் ரோகித் சர்மா உடன் இணைந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறங்கினார். இது யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் முதல் டெஸ்ட் போட்டி ஆகும். இருவரும் நிலைத்து நின்று ஆடினர். இதில் முதல் நாளில் ஜெய்ஸ்வால் 40 ரன்னுடனும், ரோகித் சர்மா 30 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பின்னர், இருவரும் 2ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய நிலையில் கூடுதலாக 10 ரன்கள் சேர்த்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஷ்வால் தனது முதல் டெஸ்ட் போட்டியில் அரைசதத்தை பதிவு செய்தார்.
முதல் நாளிலேயே 5 விக்கெட்டுகள் - ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்த சாதனைகள் ஏராளம்!
பவுண்டரி அடித்து தனது முதல் அரைசதத்தை பதிவு செய்து விளையாடி வருகிறார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை அடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலிற்கு டிரெஸிங் ரூமில் இருந்த விராட் கோலி, ஜடேஜா, ராகுல் டிராவிட் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
Whole dressing room stands for Jaiswal after completing the fifty.
What a moment. pic.twitter.com/amPbiFFCf1